Load Image
Advertisement

புல்லட் ஓட்டணும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்!

Solkirargal: Radiant Riders, Chennai Roshini: All you need is the desire to drive a bullet!    புல்லட் ஓட்டணும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்!
ADVERTISEMENT
பெண்களுக்கு மட்டும் புல்லட் ஓட்ட கற்றுத் தரும், 'ரேடியன்ட் ரைடர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், சென்னையைச் சேர்ந்த ரோஷினி:

திருச்சி பொண்ணு நான். மாஸ்டர் டிகிரி முடிச்சதும் திருமணமாகி, குழந்தையும் பிறந்துடுச்சு. காலேஜ் படிச்சிட்டிருந்தபோதே பெரிய பைக் ஓட்டுவதில் ஆர்வம் இருந்தது. முதன் முதலில், 'பல்சர்' பைக்கை நண்பர்களிடம் வாங்கி, நானே ஓட்டிப் பழகினேன்.

திருமணம், குழந்தை என்று ஆனதும் பைக் ஓட்டுறதுல, 'டச்' விட்டுப் போச்சு. திடீர்னு ஒரு நாள் மறுபடியும் அந்த ஆசை எட்டிப் பார்த்தது; இனிமே ஓட்ட முடியுமா என்கிற தயக்கமும் இருந்தது.

அந்தத் தயக்கத்தை ஓரங்கட்டி, மறுபடியும் பைக் ஓட்டினேன். பைக்கை எடுத்து ஓட்டத் துவங்கியதும், அத்தனை நாட்களாக இழந்த ஏதோ ஒன்று திரும்ப கிடைத்தது போல இருந்தது.

அப்போது தான், பெண்களுக்கு புல்லட் ஓட்ட சொல்லிக் கொடுக்கலாமா என்ற ஐடியாவும் வந்தது.

இதுவரை எந்த ஆணாவது, 'நான் உயரம் கம்மி, அதனால் பெரிய பைக் ஓட்ட மாட்டேன்; ஒல்லியா இருக்கேன், அதனால புல்லட் ஓட்ட மாட்டேன்'னு சொல்லி கேள்விப்பட்டிருக்கோமா... ஆண்களால முடியும் போது பெண்களாலயும் முடியும். எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம்.

என்னிடம் பயிற்சி எடுக்க வருவோர், 'சின்ன வயசுல ஆசைப்பட்டேன்; அப்போ நடக்கலை. இப்பவாவது ஓட்டணும்னு நினைக்கிறேன்; கத்துக்கொடுக்க ஆளில்லை. பைக் ஓட்டத் தெரியும். சின்ன விபத்துக்கு பின் ஒரு பயம் வந்திருச்சு; அதுல இருந்து மீளணும்னு இப்ப ஓட்ட ஆசைப்படுறேன்' என்று, பல காரணங்கள் சொல்வர்.

காரணம் எதுவாக இருந்தாலும், வண்டி ஓட்டியே தீரணும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்வேன்.

காலை 8:00 முதல் மாலை 5:00 வரையிலான ஒரு நாள் பயிற்சியில், அதிகபட்சமாக ஐந்து பேருக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கிறேன்.

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிப்போருக்கு, பார்வை சரியாக இருக்கிறதா, பி.பி., சாதாரணமாக உள்ளதா என்ற ஆரோக்கிய தகவல்களை மட்டுமே உறுதி செய்து கொள்கிறேன்.

பைக், பாதுகாப்பு கவசங்கள் என அனைத்தையும் கொடுத்து, அடிப்படை விஷயங்களில் இருந்து பயிற்சியை துவங்குகிறேன்.

அதன்பின், 'கியர்' போடுவது, எந்த வேகத்தில் வாகனத்தை இயக்குவது என அடுத்தடுத்த பாடங்கள், இறுதி வகுப்பில், பாதுகாப்பு டிப்சையும் வலியுறுத்து வேன்.

வண்டியை வேகமாக ஓட்டுவது, 'ரேசிங், வீலிங்' செய்வதெல்லாம் வேண்டாம். பாதுகாப்பாக ஓட்டுவது மட்டும் தான் உங்க கவனமாக இருக்கணும்.

இது அட்வென்சருக்காக செய்வதில்லை; ஆர்வத்துக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் செய்கிறோம் என்பதை, எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


வாசகர் கருத்து (1)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    Bullet says 'want you to ride me'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement