Load Image
Advertisement

டவுட் தனபாலு

 Dout Dhanapalu    டவுட் தனபாலு
ADVERTISEMENT
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 'மிக்ஜாம்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னையில், மாநகராட்சியும், வருவாய் துறையின் மீட்புக் குழுக்களும், அமைச்சர்கள், அதிகாரிகள் வாழும் பகுதிகளில் தான் வேலை செய்கின்றன. சாதாரண மக்கள் வாழும் பகுதிகளில் மீட்பு பணிகள் நடக்கவில்லை. நிவாரண பணிகளை விரைவுபடுத்தி, மக்களின் துயரங்களை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகர், புறநகரில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா, 10,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

டவுட் தனபாலு: இந்த மிக்ஜாம் புயல் மட்டும், லோக்சபா தேர்தலை ஒட்டி வந்திருந்தா, டாக்டர்கேட்டதை விட கூடுதலாகவே நிவாரண நிதியை வாரி வழங்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி: 'ஹிந்தி தெரியாது போடா' என வாசகம் பொறிக்கப்பட்ட, 'டி ஷர்ட்' அணிந்து, அமைச்சர் உதயநிதி வலம் வந்தார். தற்போது, புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரில், ஏராளமான வட மாநில வீரர்கள் உள்ளனர். அவர்கள் தான், ஹிந்தி மொழி புரியாத மக்களை காப்பாற்றி வருகின்றனர். 'ஹிந்தி தெரியாது போடா' என்ற பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியால், அந்த வீரர்களை நோக்கி, அதே வாசகத்தை சொல்ல முடியுமா?

டவுட் தனபாலு: அரசியல் செய்ய ஆயிரம் பிரச்னைகள் இருக்குதே... விடாது மழை பெய்து, வெள்ளம் சூழ்ந்து, சென்னை மக்கள் எல்லாம் படாதபாடு பட்டுட்டு இருக்காங்க... இந்த நேரத்துல, நீங்க பழைய காயத்தை கிளறி பார்க்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!



மேல்நிலைப் பள்ளி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளங்கோவன்:
சென்னை வெள்ள நிவாரண பணிகளுக்கு அரசுக்கு உறுதுணையாக நிற்க, ஒருநாள் சம்பளத்தை வழங்குவதாக ஒப்புதல் தெரிவித்து, அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... ஆனா, பல ஆயிரங் கள்லயும், லட்சத்துலயும் சம்பளம் வாங்குற ஆசிரியர்கள், இன்னும் சில நாட்கள் ஊதியத்தையும் சேர்த்து தந்தா குறைஞ்சா போயிடுவாங்க என்ற, 'டவுட்'தான் வருது!




வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அமைச்சர்கள், எம். எல். ஏக்கள், மேயர், அதிகாரிகள் இதுவரை இதுபற்றி வாயே திறக்காத நிலையில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக உள்ளதற்கு முதலில் பாராட்டு தெரிவிப்போம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement