Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்: கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி

அறிவியல் ஆயிரம்

கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி



உயிரினங்களில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் தவிர நுண்ணுயிரிகளும் உள்ளன. இதில் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ், புரோட்டோசோவா உள்ளன. இவை வெறும் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் உதவியுடனே பார்க்க முடியும். இதில் மனிதர்களுக்கு நோயை பரப்பும் பல நுண்ணுயிரிகள் இருந்தாலும், சில மருந்து, உணவு தயாரிப்புக்கு பயன்படுகின்றன. உணவுப் பொருட்களைச் சூடாக்கினால் தீமை செய்யும் பாக்டீரியா என்ற நுண்ணுயிர் அழியும் என்பதை, உறுதிப்படுத்தியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லுாயி பாஸ்டர். இதற்கு 'பாஸ்கரிசேஷன்' என பெயர்.

தகவல் சுரங்கம்





வேகமான புயல்



உலகில் இதுவரை பதிவான புயல்களில், காற்றின் வேகம் அடிப்படையில் மிக பெரியது 'ஒடிஸ்'. இது 2023 அக். 22ல் பதிவானது. இது மெக்சிகோவில் கரையை கடந்த போது மணிக்கு 270 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இப்புயல் காரணமாக 50 பேர் பலியாகினர். 30 பேர் காணாமல் போயினர். மொத்தமாக ரூ. 1.10 லட்சம் கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாக அதிகவேக புயலும் மெக்சிகோவில் தான் பதிவாகியிருந்தது. இதன் பெயர் 'பட்ரிகா'. இது 2015 அக்.23ல் மெக்சிகோவில் ஏற்பட்டது. இது கரையை கடந்த போது மணிக்கு 240 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement