Load Image
Advertisement

தி.மு.க., மாநாட்டு பந்தலில் கிடா வெட்டி பூஜை!

 D.M.K., Kida Vetti Pooja at the conference pavilion!    தி.மு.க., மாநாட்டு பந்தலில் கிடா வெட்டி பூஜை!
ADVERTISEMENT

''பரிகார பூஜை பண்ணி, 1,000 பேருக்கு கறி விருந்து போட்டிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்துல, வர்ற 17ம் தேதி, தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு நடக்க போகுதுல்லா... இதுக்கு பந்தல் அமைக்கிற பணிகள் நடந்தப்ப, சில தொழிலாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தடுமாறி விழுந்து ரத்தக்காயம் பட்டாவ வே...

''இதனால, எந்த அசம்பாவிதமும் இல்லாம மாநாடு வெற்றிகரமா நடக்கணும்னு, சமீபத்துல பந்தல்ல ரத்தக்காவு குடுத்திருக்காவ... அதிகாலை, 5:00 மணிக்கு மாநாட்டு பந்தலின் எட்டு திசைகள்லயும், எட்டு கிடாக்களை வெட்டி, பூஜை பண்ணியிருக்காவ வே...

''அப்புறமா அந்த ஆடுகளை வெட்டி, பிரியாணி தயார் பண்ணி, கட்சி நிர்வாகிகள், மாநாட்டு பந்தல் தொழிலாளர்கள்னு, 1,000 பேருக்கு அசைவ விருந்து போட்டிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

''வாழ்க பகுத்தறிவாளர்கள்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர் களும் கிளம்பினர்.


வாசகர் கருத்து (9)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    அந்த கெடா காணோம்னு தேடி திரியும் நண்பர்கள் ஜாக்கிரதை

  • p.kulandai vel - kulithalai,இந்தியா

    vazhka pakuttarue

  • RAAJ68 -

    வெள்ளம் வடியவில்லை. மக்கள் எல்லா உடமைகளை இழந்து துயரத்தில உள்ளனர். இந்த நிலையில் மாநாடு அவசியமா?

  • Sampath Kumar - chennai,இந்தியா

    ஏன் நடுத்துன என்ன தப்பு

    • Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா

      பகுத்தறிவு "பகுத் அச்சா ஹே"

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    ஆக கிருத்துவ முறைப்படி நடந்த சடங்கு என கர்த்தரின் சீடர் விடியல் சார் பெருமிதம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement