Load Image
Advertisement

ரூ.40 லட்சம் தந்தவர் உத்தம சிகாமணியா?

 Is it Uttama Chikamani who gave Rs.40 lakh?    ரூ.40 லட்சம் தந்தவர் உத்தம சிகாமணியா?
ADVERTISEMENT

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தனிமனித ஒழுக்கம் என்பது, ஒவ்வொருவரின் குடும்பத்தில் இருந்தும் உருவாக வேண்டும். இன்று பெற்றோர்களே ஒழுக்கம் இல்லாதோராக உள்ள போது, குழந்தைகளிடம் எப்படி நேர்மையான செயல்பாடுகளை எதிர்பார்க்க முடியும்.

இதனால் தான், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் வாழ்நாள் முழுதும் பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடி, ஒழுக்கத்தையும், தேசப்பற்றையும் போதித்து வந்தார்.

அவரிடம் ஒரு மாணவர், 'எப்போது நம்மிடம் ஊழல் ஒழியும்' என கேட்டபோது, 'நம் பெற்றோர் ஊழல் பணத்துடன் வீட்டுக்கு வரும்போது, இது எப்படி வந்தது என கேட்பதுடன், அதை கையால் தொட மாட்டோம் என்று மறுக்கும்போது, ஊழல் நம்மை விட்டு ஒழியும்' என்றார்.

ஆனால், இன்று ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தை, அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வது, அவர்கள் மேலும் ஊழல் செய்ய ஊக்கம் தருகிறது.

இதற்கு உதாரணம், சமீபத்தில் மதுரையில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபு என்பவரிடம், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி வசமாக சிக்கிக் கொண்டார். அவரது கைது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை, அரசியல் ஆக்காமல் பாராட்டுவோம்.

அதே நேரம், லஞ்சம் கொடுத்த டாக்டர் சுரேஷ்பாபு உத்தம சிகாமணியாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அவர் மீது, 2018ல் மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.

அந்த வழக்கு எப்படி நடத்தப்பட்டு, முடிவடைந்தது என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை குறுக்கு வழியில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தால், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், அவர் நேர்மையானவராக இருந்தால், அமலாக்கத் துறைக்கு பயந்து ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?

எது எப்படியோ... அங்கித் திவாரி போன்ற பல கருப்பு ஆடுகள் அமலாக்கத் துறையில் இருப்பதால் தான், சுரேஷ்பாபு போன்றோர் தவறான வழியில் சொத்துக்கள் வாங்கி குவிக்கின்றனர். இவர்கள் போன்றோரை சும்மா விடக் கூடாது!


வாசகர் கருத்து (27)

  • MADHAVAN - Karur,இந்தியா

    திருடனுக்கு முட்டு குடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க பிஜேபி கரனுங்க,

  • MADHAVAN - Karur,இந்தியா

    லஞ்சம் வாங்கி அதை திங்கறதுக்கு...

  • MADHAVAN - Karur,இந்தியா

    இப்படி திட்டு காசுல

  • MADHAVAN - Karur,இந்தியா

    இந்த காசுதான் ஒவொரு பிஜேபி காரனுக்கும் சோறு போடுது, இந்த காசுல தான் சோறு தின்கிதுங்க,

  • MADHAVAN - Karur,இந்தியா

    இந்த kaa

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்