Load Image
Advertisement

பயணியர் வருகை குறைவு 22 விமான சேவை ரத்து

 22 flights canceled due to lack of passenger arrivals    பயணியர் வருகை குறைவு 22  விமான சேவை ரத்து
ADVERTISEMENT


சென்னை : பயணியர் வருகை மிகவும் குறைவாக இருந்ததால், சென்னையில் நேற்று, 22 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காலை 6:30 மணி விஜயவாடா இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 6:45 மணி விசாகப்பட்டினம் இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 8:00 மணி டில்லி, காலை 8:10 மணி கொச்சி, காலை 8:45 மணி பெங்களூரு.

காலை 9:05 மணி திருவனந்தபுரம், காலை 9:45 மணி புனே, காலை 10:10 மணி கோவை, மதியம் 1:15 மணி சூரத், மதியம் 1:25 மணி வாரணாசி ஆகிய 11 புறப்பாடு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதைப்போல் இந்த 11 விமானங்களின் வருகை சேவையும் ரத்து செய்யப்பட்டது.

அந்தமான், டில்லி, துாத்துக்குடி, ஆமதாபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கமான விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பயணியரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

'இதனால், நேற்று காலை சில விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மாலையில் இருந்து வழக்கமான விமான சேவை, குறித்த நேரத்தில் இயக்கப்பட்டது' என்றனர்.


வாசகர் கருத்து (3)

  • அப்புசாமி -

    ஏற்கனவே இண்டிகோக் காரங்க பேராசை புடிச்சவங்க. இதுல இது வேற.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்க போகிறார்களாம். அந்த ஊரை சுற்றி பல ஏரிகள், குளங்கள், குட்டைகள். மழை காலத்தில் அங்கு நிலைமை எப்படி இருக்குமோ? இப்படி செய்யலாம், அங்கு வரும் விமானங்கள் வானில் பறக்கக்கூடியவகையிலும், மழைக்காலங்களில் தண்ணீரில் மிதப்பதுபோலும் இருக்கவேண்டும்.

  • ramesh - kanchipuram,ஓமன்

    ஒரு விமான நிலைய ஓட்டு பாதையை தண்ணீர் தேங்காமல் பார்க்க முடிய வில்லை, இனி எப்படி ஆட்கள் சென்னை விமான நிலையம் வருவார்கள்...waste

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்