Load Image
Advertisement

இண்டியா பார்லி., குழு கூட்டம் திரிணமுல் காங்., புறக்கணிப்பு

 India Parli., Committee meeting Trinamul Cong., Boycott    இண்டியா பார்லி., குழு கூட்டம் திரிணமுல் காங்., புறக்கணிப்பு
ADVERTISEMENT


புதுடில்லி : எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியின் பார்லிமென்ட் குழுத் தலைவர்கள் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், 17 கட்சிகளின் பார்லிமென்ட் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில் திரிணமுல் காங்., புறக்கணித்தது.

காங்கிரஸ், தி.மு.க., உட்பட, 28 கட்சிகள் அடங்கிய, இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டம், புதுடில்லியில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரிணமுல் காங்., ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க இயலாது என, தெரிவித்தன.

இதையடுத்து, இந்தக் கூட்டம், இம்மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைப்பதாக, கூட்டத்தை நடத்தும் காங்கிரஸ் நேற்று முன்தினம் அறிவித்தது.

அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள கட்சிகளின் பார்லிமென்ட் குழுத் தலைவர்கள் கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று நடந்த கூட்டத்தில், 17 கட்சிகளின் பார்லிமென்ட் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தி.மு.க.,வின் சிவா, பாலு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


வாசகர் கருத்து (13)

  • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

    I. N. D. I .A கூட்டணியில் முதல் கட்ட தலைவர்கள் கீழ் இறங்கி இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு விட்டு கொடுத்தால் கூட்டணி வரும் தேர்தலில் மரியாதைக்குரிய வாக்கு வங்கி பெரும். கூட்டணி வலுப்பெறும் பி ஜெ பி யை தோற்கடிக்க. 2024 தேர்தலில் சாத்தியம் இருக்காது. கூட்டணி தலைவர்கள் தியாகம் செய்பவர்களா என்பது சந்தேகம்தான்.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    என்னப்பா, அடுத்த பிரதமரை கை காட்டும் எங்கள் தளபதி இல்லாமல் என்ன கூட்டம் நடத்துகிறீர்கள் ஓ, அவர் மக்கள் சேவையில் ஈடுபட்டுருக்கிறாரா?

  • duruvasar - indraprastham,இந்தியா

    அடடா நம்ம தன்மான தமிழர் மீட்டிங்கில் உட்கார்ந்து நோட்ஸ் எல்லாம் எடுக்கிறார். படிச்சி பாஸ் பண்ணிடுவார் என்று தான் தோற்றமளிக்கிறது.

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    ராகுல் தொலைபேசியில் அழைத்தார் ஆனாலும் கடைசி நேரத்தில் முடிவானதால் தற்போதைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென்றும் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் பற்கேற்ப்போம் என அறிவித்து விட்டார்...

    • duruvasar - indraprastham,இந்தியா

      இதுக்கு பேர் தாங்க "நமக்கு நாமே" ஆறுதல் சொல்லிக் கொள்வதென்பது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    முக்கல் முனகல் முட்டல் ஆரம்பம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement