Load Image
Advertisement

மிசோரமில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் லால்துஹோமா

 Lal Duhoma claimed right to form government in Mizoram    மிசோரமில் ஆட்சி அமைக்க  உரிமை கோரினார் லால்துஹோமா
ADVERTISEMENT
அய்ஸ்வால், மிசோரமில், ஜோரம் மக்கள் இயக்கத்தலைவர் லால்துஹோமா, கவர்னர் ஹரிபாபுவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வடகிழக்கு மாநிலமான மிசோரமில், கடந்த மாதம் 7ல் சட்டசபை தேர்தல் நடந்தது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில், ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணி, தோல்வியை தழுவியது.பா.ஜ., இரு தொகுதிகளையும்,காங்., ஒரு தொகுதியையும் கைப்பற்றியது. வெற்றி பெற்ற ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவரான லால்துஹோமா, எம்.எல்.ஏ.,க்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஆட்சியமைப்பது குறித்தும், யாருக்கு எந்த இலாகாவை ஒதுக்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.ஓய்வுபெற்றஐ.பி.எஸ்., அதிகாரியான லால்துஹோமா முன்னாள் பிரதமர் இந்திராவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். இவர் ஓய்வு பெற்ற பின் ஜோரம் மக்கள் இயக்கத்தை துவங்கினார். இந்நிலையில் நேற்று காலை தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலுடன் சென்று மிசோரம் கவர்னர் ஹரிபாபுவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.லால்துஹோமா முதல்வராக நாளை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    மிசோரத்திலும்,தெலங்காணாவிலும் சனாதன எதிர்ப்பு ஒர்க்கவுட் ஆயிடிச்சு. திருப்பதி தரிசனம் கை குடுக்கலை.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    அடுத்தது ரிட்டைர்டு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைதான் தமிழ்நாட்டின் முதல்வர் திராவிட இது கட்சிகளுமே காணாமல் போயிடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement