Load Image
Advertisement

அதிக குழந்தை பெத்துகங்கோ : கண்ணீர் மல்க வட கொரிய அதிபர் உருக்கம்

Too much child abuse: North Korean president melts in tears  அதிக குழந்தை பெத்துகங்கோ : கண்ணீர் மல்க வட கொரிய அதிபர் உருக்கம்
ADVERTISEMENT
பையாங்க்: வட கொரிய பெண்கள் இனி அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என வட கொரியா அதிபர் கிம்ஜோங் உன், கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்,41 , 2011 ல் நாட்டின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட பிறகு உலக நாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் வட கொரிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதிபர் கிம் ஜோங் உன் பேசியது,, கட்சி , மற்றும் அரசு நிர்வாக பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும் போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவது எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெண்களுக்கு மட்டுமே உள்ளது.

எனவே வட கொரிய பெண்கள் இனி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார். பேசும் போதே உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீர் வர அதை கைக்குட்டையால் துடைப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

புடினின் ஆசைகடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் பேசுகையில், நம் நாட்டின் மக்கள் தொகை சரிவை சந்தித்துவருகிறது பிறப்பு விகிதம் சரிந்து வருவதால், ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் ரஷ்ய மக்கள்தொகையை அதிகரிப்பதே அரசின் இலக்கு என கூறியது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து (9)

 • பாரதி -

  நம் நாட்டில் கூட மோடி அவர்கள் "எனது பலமே இந்த நாட்டின் ஜனத்தொகை தான்" என்றுதான் கூறுகிறார் . அவர் ஜனத்தொகையை நினைத்து புலம்பியதே இல்லை, மற்றவர்களைப் போல. அவர் உண்மையில் மதிப்பை அறிந்தவர் அறிவாளி...

 • mohan - chennai,இந்தியா

  ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல அனுமதி கிடையாது.. பொது வான சினிமா பார்க்க கூடாது..இன்னும் பல சாதாரண மனித உரிமையில் கூட கிடையாது...இதென்ன கொடுமை...பின்னர் மக்கள் பிள்ளை பெற்று என்ன பயன்..வட கொரியாவில் இருந்து , தப்பி வந்தவர்களின பேச்சை, யு டியூபில் காணுங்கள்...பின்னனர் நிலைமை என்ன வென்று புரியும்.. இந்த ஆளுகைக்கு செவ்வலியார் விருது கொடுக்கலாம்...

 • BALOU - st-denis,பிரான்ஸ்

  சோத்துக்கே வழி இல்லாமல் திண்டாடும் நாடு வடகொரியா இதில் பிள்ளை பெற்று என்ன செய்வார்கள்

  • Anvar - Singapore,இந்தியா

   உங்களுக்கு எப்படி தெரியும்?

 • venugopal s -

  பாஜக ஆளும் மாநிலங்கள் இருக்கும் வரை நமக்கு இந்தக் கவலை இல்லை!

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,

   ஒருவனின் தொண்டன் எழுதும் வார்த்தை எப்படியிருக்கு பார்த்தீர்களா?

  • Sampath - chennai

   தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து தத்து எடுத்துகொள்ளுங்கள். அப்படியாவது, இந்தியா, சீனா, வடகொரியா நாடுகளிடையே உள்ள மனஸ்தாபம் அகன்று, 'மனிதவளம்' பெருகி, ஒற்றுமையாக இருப்போம். ரஷ்யா அதிபர் புட்டினுக்கும் இதே வேண்டுகோள்தான், அதாவது இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து குழந்தைகளை தத்து எடுத்து வளருங்கள் என்று.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

   ஆத்தாடி , என்ன ஒரு சிந்தனை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்