Load Image
Advertisement

பார்முலா கார் பந்தயம் 15, 16ல் நடத்த திட்டம்

 Formula car races planned for 15, 16    பார்முலா கார் பந்தயம்  15, 16ல்  நடத்த திட்டம்
ADVERTISEMENT
சென்னை:சென்னையில், வரும் 15, 16ம் தேதிகளில், 'பார்முலா 4' கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் 9 மற்றும் 10 தேதிகளில், சென்னையில் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்ட்ரீட் பந்தயம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்த பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னைக்குள் பந்தயம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் ஸ்ரீ ஹரிஷ், லுாயிஸ்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தீவுத்திடல் அருகில் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுக்களில் கூறப்பட்டன.

இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பந்தயம் நடத்துவதற்கு ராணுவம், கடற்படை, துறைமுகம், போக்குவரத்துத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று, தாக்கல் செய்யும்படி, அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

தமிழக அரசுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக, 9, 10ம் தேதிகளில் நடக்க இருந்த பார்முலா கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது; வரும் 15, 16ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

''பந்தயம் நடத்துவதற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன. டிக்கெட் விற்பனையும் துவங்கி விட்டது,'' என்றார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து, விசாரணையை, வரும் 11க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement