Load Image
Advertisement

கல்வித் துறையில் எந்த வயதிலும் சேவை செய்யலாம்!

Solkirargal: Corporation School, Padmini Gopalan, Montessori: Any age can serve in the field of education!    கல்வித் துறையில் எந்த வயதிலும் சேவை செய்யலாம்!
ADVERTISEMENT
மாநகராட்சி பள்ளிகளில், 'மாண்டிசோரி' பிரிவை துவங்கி செயல்படுத்தி வரும், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த, 92 வயதான பத்மினி கோபாலன்: பல ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு சாதாரண குடும்ப தலைவி; 'புரொபஷனல்' தகுதி எதுவுமில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாய். வீட்டு வேலைகளை முடித்து விட்டு, அவர்களுக்கு வீட்டு பாடங்களை முடிக்கவும் உதவி செய்வேன்.

தினசரி வாழ்க்கைக்கே கஷ்டப்படும் பெற்றோர், அவர்களின் குழந்தைகளை எப்படி வளர்ப்பாங்க, எப்படி படிக்க வைப்பாங்கன்னு மனசுக்குள்ளே ஓடிட்டே இருக்கும். அதற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.

பணத்தால் உதவி செய்ய, அந்தளவுக்கு வசதியில்லை. அதனால், படிக்கிற குழந்தைகளை கூப்பிட்டு என் வீட்டு வராண்டாவில், அவங்களுக்கான பள்ளி பாடங்களை சொல்லிக் கொடுப்பேன்.

இப்படி ஒன்றுமில்லாத என்னாலேயே ஏதோ செய்ய முடிந்தது எனில், என்னைவிட அதிகமாக படித்தோர், வசதியா இருப்போர் ஏன் செய்யக்கூடாதுன்னு தோன்றும். அவங்களை ஒன்றாக சேர்த்து அதை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்க முடிவு செய்தோம். அப்போது அறிமுகமானது தான், காந்தி கூறிய, சிறந்த கல்விமுறையான, 'மாண்டிசோரி' முறை!

'இத்தனை வயது வரை வாழ்ந்துட்டு, அதுக்கப்புறமும் இந்த சமூகத்துக்கு எதுவுமே செய்யாமல் போயிடுவோமோ?' என்ற கேள்விக்கு, நான் எடுத்த முயற்சி, நல்ல பதிலாக கிடைச்சிருக்கிறதா இப்போது உணர்கிறேன்.

கடந்த, 2004ல், சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில், மாண்டிசோரி மழலையர் பிரிவை துவங்கி வைத்தேன்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் பலரின் உதவியுடன், 'ராம் சரண் அறக்கட்டளை'யை துவங்கி, அதன் வாயிலாக வரும் வருமானத்தை வைத்து, இன்று சென்னையில், 15 மாநகராட்சி பள்ளிகளில் மாண்டிசோரி வகுப்புகள் துவங்கினேன்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான். அவர்களுக்கு ஒரு நல்வழியை காட்டி விட்டால், அவர்கள் நல்ல குழந்தைகளாக வளர்வர்; குழந்தைகளின் உணர்வை மதிக்கணும்.

இந்தக் காலத்தில் வயது ஒரு பொருட்டே இல்லை. சொல்லப் போனால், குடும்ப பொறுப்புகள் தீர்ந்த பின் பந்தங்களில் இருந்து விலகி, சமூகத்துக்காக நம்மை அர்ப்பணிக்கிற சரியான வயது இதுதான் என சொல்வேன்.

கல்வித் துறையில் எந்த வயதிலும் எல்லாரும் சேவை செய்யலாம். எங்களால் முடிந்த அளவு சிறு, ஒரு டிரஸ்ட் அமைத்து, அதன் வாயிலாக செய்து வருகிறோம். அதை இன்னும் பல இடங்களுக்கு கொண்டு போகணும் என்பது என் ஆசை.


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கற்கவும் வயது வரம்பு இல்லை. கற்பிக்கவும் வயது ஒரு தடையில்லை. சிறந்த சேவை செய்துவரும் உங்களுக்கு என் அநேககோடி நமஸ்காரங்கள். நீங்கள் கூறிய இந்த வார்த்தைகள் - குடும்ப பொறுப்புகள் தீர்ந்த பின் பந்தங்களில் இருந்து விலகி இருந்து சமூகத்திற்கு சேவை செய்யவேண்டும் - என்னை மிகவும் ஈர்த்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement