Load Image
Advertisement

டவுட் தனபாலு

 Dout Dhanapalu  டவுட் தனபாலு
ADVERTISEMENT
சென்னை மேயர் பிரியா: நடிகர் விஷால் வீட்டுக்கு மட்டும் வெள்ளம் வரவில்லை; ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தி.மு.க., பொறுப்புக்கு வந்த, 2021 மே மாதத்தில் இருந்து, மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வந்தது. அப்பணிகளால் தான் சென்னை காப்பாற்றப்பட்டு இருக்கிறது. விஷால் அரசியல் செய்ய முயலாமல், கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம்; அதை அரசு நிறைவேற்றி தரும்.

டவுட் தனபாலு: அதானே... பொது வெளியில குற்றம் சாட்டாம, மேயருக்கு ஒரு போன் போட்டு குறையை சொல்லியிருந்தாருன்னா, அவர் வீட்டுக்கு மட்டும் ஜெட் மோட்டாரை அனுப்பி, அரை மணி நேரத்துல வெள்ள நீரை வெளியேற்றியிருப்பாங்க... அதை விட்டுட்டு, ஹீரோ மாதிரி வாய்ஸ் குடுத்து, வாங்கி கட்டிக்கிட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!



வேப்பனஹள்ளி தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன்: சேலம் இளைஞரணி மாநாட்டு நிதியாக ஒன்றிய செயலர்கள், 6 லட்சம்; நகர செயலர், 20 லட்சம் ரூபாய் வசூல் செய்து தரும்படி கேட்டு உள்ளனர். இதனால் அவர்கள், கடை, கடையாக வசூல் செய்கின்றனர்; இது, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.

டவுட் தனபாலு: நிறைவேற்றாத வாக்குறுதிகள், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காம, சென்னை மக்களை வெள்ளத்துல மிதக்க விட்டதுன்னு, ஏற்கனவே, மக்கள் மத்தியில ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் இருக்குது... இதுல, கட்சி நிர்வாகிகள் வசூல் பண்ணி தான் கெட்ட பெயரை ஏற்படுத்தணுமா என்ற, 'டவுட்'தான் வருது!



நடிகர் விஷால்:
சென்னையில், இப்ப நான் அண்ணா நகரில் தங்கியிருக்கேன். என் வீட்டுலேயே, 1 அடிக்கு தண்ணீர் வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால், அப்பறம் யோசிச்சு பாருங்க... மாநகரில் அனைத்து இடத்திலும், மழைநீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம். ஏன் வரி கட்டுகிறோம் என, கேள்வி கேட்க வைக்காதீங்க. எம்.எல்.ஏ.,க்களே... இப்பவாவது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க.

டவுட் தனபாலு: எம்.எல்.ஏ.,க் கள் வந்து முகத்தை காட்டிட்டா மட்டும், வெள்ளம் வடிஞ்சிடுமா... உங்களை மாதிரி பிரபலங்கள், உங்க ரசிகர் பட்டாளத்தோட மீட்பு மற்றும் நிவாரண பணிகள்ல களம் இறங்கிறதை விட்டுட்டு, இப்படி வெட்டி நியாயம் பேசிட்டு இருக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!




வாசகர் கருத்து (7)

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  அரசு மிக சிறப்பாக செயல் பட்டது ,

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  அக்கா சரியாய் சொன்னீங்க , பாராட்டுகிறேன் உங்களை

 • GANESUN - Chennai,இந்தியா

  அட்ட கத்தி நாடகம்..

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  விஷாலுக்கு உதயநிதி நெருங்கிய நண்பராம். இவர் உடன் படித்தவராம் ஸ்டாலின் அங்கிளிடம் பேசி இவர் வீட்டு தண்ணி பிரச்னையை தீர்த்திருக்கலாமே.

 • Bharathi -

  this lady fit for nothing the party internally kept her to be a dummy and puppet for their looting as a subceiber mentioned here we all must help each other and even the government announced a system called NAMAKKU NAME hence lets not ruin our life by trusting these .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement