Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம் அதிகரிக்கும் கார்பன் அளவு

அறிவியல் ஆயிரம்


அதிகரிக்கும் கார்பன் அளவு

நிலக்கரி, நிலக்கரி பொருட்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு அளவு 2023ல் உச்சம் தொட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3680 கோடி டன் கார்பன், வளிமண்டலத்தில் கலந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.10 சதவீதம் அதிகம். உலகளவில் வெளியிடப்படும் கார்பன் அளவு 2010ல் இருந்து ஆண்டுதோறும் 1 சதவீதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக 2300க்குள் கடல்நீர் மட்டம் 4 அடி உயரும் என எச்சரித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்


கொடி, விமான போக்குவரத்து தினம்

முப்படையினர், முன்னாள் வீரர்களின் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. மக்களிடமிருந்து பணம் பெற்று, வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

* உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் சர்வேதேச விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக டிச., 7ல் உலக விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலக விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு நவீன கண்டுபிடிப்பு' என்பது இந்த ஆண்டின் மையக்கருத்து.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement