Load Image
Advertisement

வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா: குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு

Chennai Flood-hit actress Namitha: Rescued safely with children    வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா: குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு
ADVERTISEMENT
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை நேற்று(டிச.,05) உடைந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் புகுந்தது.இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். 6 அடி உயர வெள்ளத்தில் ஒரு வயதான இரட்டை குழந்தைகளுடன் சிக்கினார்.

அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று(டிச.,06) பத்திரமாக மீட்டனர்.


வாசகர் கருத்து (6)

  • Ganapathy - chennai,இந்தியா

    இப்ப எங்க ஆளக்காணோம் .மேயர் பிரியாவ?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மச்சான்ஸ்னா சும்மாவா ...???

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன ....... நமீதாவை மீட்கறது முக்கியமா இல்ல, அவங்களை மீட்கறது முக்கியமா ???? புரிஞ்சுக்க வேண்டாமா ????

  • குமரி குருவி -

    பிரபலங்களை காப்பாற்றினால்தான் பரபரப்பாக ... பிரபலமாகமுடியுமோ...?

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    மனிதம் போற்றுதலுக்குரியதே..வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்