Load Image
Advertisement

45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம்: அண்ணாமலை பேட்டி

 45 years of woes will soon end: Annamalai interview    45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம்: அண்ணாமலை பேட்டி
ADVERTISEMENT
சென்னை: ‛‛45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்'' என அண்ணாமலை கூறினார்.

சென்னை தியாகராய நகரில் இன்று(டிச.,06) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் இன்னும் 30 சதவீத இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. 3 நாட்களாக பாஜ.,வினர் களப்பணியில் உள்ளனர்.

திமுக எம்பிக்கள் சென்னையில் பணியில் இல்லாமல் பார்லி.,யில் மாட்டு மூத்திரம் என்று பேசி கொண்டு இருக்கிறார்கள்,. அதிமுகவின் தவறுகளை சரிசெய்ய ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது என்று திமுக எம்.பி கனிமொழி சொல்கிறார். பொய்யை மாற்றி மாற்றி சொல்லி எத்தனை நாட்கள் வண்டி ஓட்டுவார்கள்.

45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். இதில் இருந்து விடுதலை வேண்டும் என சென்னை மக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். 45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


வாசகர் கருத்து (45)

  • venugopal s -

    அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கே விடிவுகாலம் பிறக்கப் போகிறது!

  • Thetamilan - CHennai,இந்தியா

    மோடியும் அண்ணாமலையும் வாய்ச்சவடால் மன்னர்கள். 2015 ல் திமுக காரர்கள் வேலை செய்ததில் ஒரு சதவீதமாவது இப்போது பாஜ கும்பல் வேலை செயகிறதா?.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் பிரஸ் மீட்டுக்கே பயப்படுகிறவர் உலகை எல்லாம் அச்சம் இன்றி சுற்றுகிறார் ,அங்கே பல நாடுகளில் பல பத்திரிக்கையாளர்களிடம் சரளமாகப் பேசுகிறார்,தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார் .எல்லாம் கர்த்தவ்ய காலம் ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    திறமை மிகுந்த அவரை ஒட்டு மொத்தமா உலகத்துக்கே தலைவர் ஆக்கிவிடலாமே ,இந்தியாவுக்கு மட்டும் வேண்டாமே,,,,

    • Pandi Muni - Johur,மலேஷியா

      உதவாநிதியை பாகிஸ்தானுக்கே ஆக்கிடலாம்.

  • Thetamilan - CHennai,இந்தியா

    கடந்த பத்தாண்டு கால உலக மகா அவலங்களுக்கு எப்போது விடிவு காலம் ?.

    • sridhar - Chennai,இந்தியா

      உலகின் பார்வையில் இந்தியாவின் மதிப்பு உயர்திருக்கிறது . இது முரசொலி வாசகர்களுக்கு தெரியாது.

    • rajen.tnl - tirunelveli,இந்தியா

      காங்கிரஸ் வந்தா விடிஞ்சிருமா ? பாகிஸ்தான்காரன் ராணுவ வீரரின் தலையை அறுத்துட்டு போயிடுவான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்