Load Image
Advertisement

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்

Chennai Flood, Chennai Heavy Rain, Michaung Storm: DMK govts administrative failure to blame for floods: Seeman திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்
ADVERTISEMENT
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, மாநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.

ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும்.

2015ம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்புக்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.

இனி எந்தக் காலத்திலும் சென்னை வெள்ளக்காடாக மாறாவண்ணம் தடுக்கும்விதத்தில் நகரக் கட்டுமானத்தையும், வடிகால் அமைப்பையும் உருவாக்க வேண்டுமெனவும், வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏறக்குறைய 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (33)

 • சந்திரசேகர் -

  தமிழ் நாட்டில் இருக்கிறது ரெண்டு கட்சிகள் தான் மற்றவை அனைத்தும் ரெண்டு கட்சியில் ஒன்றை ஆட்சியில் அமர்த்தும் உதிரி கட்சிகள். மக்கள் மனம் மாறி ஒட்டு போட்டால் நல்லது நடக்கலாம்

 • ராமகிருஷ்ணன் -

  4700 கோடிகளை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு, இப்ப கேக்குறே, கக்கூஸில் போயி தேடு ராசா.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீயும், உன் கட்சியும் என்ன என்ன உதவி செய்தீர்கள்? இந்த நேரத்திலாவது அரசியல் செய்வதை விட்டுவிட்டு உதவ போகவேண்டியதுதானே...?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  பெட்டி முக்கியம் சைமனு. தேர்தல் சமயத்துல கவனமா பேசணும். ஹிந்து வாக்குகளை பிரிக்க கட்சி நடத்தம் ஒங்களுக்கு பெட்டி சப்ளை அங்குட்டு இருந்து கெடைச்சாதான் உண்டு. ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்.

 • Ganapathy - chennai,இந்தியா

  இவன்ட 4000கோடி கொடுத்தா நேரா புலிகளுக்கு கொடுத்தாலும் கொடுத்துடுவான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்