Load Image
Advertisement

"கர்ப்பிணியை காப்பாற்ற களமிறங்கிய ஸ்வீடன் நாட்டு இளைஞர்" : தமிழ் நடிகர்கள் எங்கே?

Michaung storm, Chennai flood, Chennai rain: Swedish youth steps in to save pregnant woman: resilience in Chennai   "கர்ப்பிணியை காப்பாற்ற களமிறங்கிய ஸ்வீடன் நாட்டு இளைஞர்" : தமிழ் நடிகர்கள் எங்கே?
ADVERTISEMENT
சென்னை: மிக்ஜாம் புயலால் கன மழை கொட்டி தீர்த்தது. வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில், "அங்க கர்ப்பிணி இருக்காங்க நான் காப்பாத்த போகணும்" என ஸ்வீடன் நாட்டு இளைஞர் களத்தில் இறங்கினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வேளச்சேரி, மடிப்பாக்கம், புறநகர் சென்னை, வட சென்னை பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. வேளச்சேரியை போல மடிப்பாக்கம் பகுதியிலும் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டிருந்த ஸ்வீடன் நாட்டு இளைஞரைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த இளைஞர் அங்க கர்ப்பிணி இருக்காங்க நான் காப்பாத்த போகணும் என கூறும் வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



நடிகர்கள் எங்கே?




தமிழ் மக்களை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் யாரையும் வெள்ளத்தின் போது காண முடியவில்லை. யாரை வைத்து பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு உதவ எந்த நடிகரும் முன்வரவில்லை. ஆனால் சென்னை மக்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு வெளிநாட்டு இளைஞர் வெள்ளத்தில் மக்களுக்கு உதவுகிறார். இதை பார்த்தாவது தமிழர்கள் மனம் மாற வேண்டும்.



வாசகர் கருத்து (41)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கர்ப்பிணியை காப்பாற்ற களமிறங்கிய ஸ்வீடன் நாட்டு இளைஞர் - இது ரியல், சினிமா அல்ல. "கர்ப்பிணியை காப்பாற்ற களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த பல நடிகர்கள்" - இது ரீல். ஸ்வீடன் நாட்டில் ஒரு படப்பிடிப்பில் நடக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தை சேர்ந்த அந்த சூப்பர் ஸ்டார் முதல்கொண்டு மற்ற நடிகர்கள் எங்கேபோய் தொலைந்தார்கள், இந்த நேரத்தில் மக்களுக்கு உதவாமல்?? வெட்கமாக இல்லை அவர்களுக்கு தங்களை ஹீரோக்கள் என்று சொல்லிக்கொள்ள..

  • sankaran - hyderabad,இந்தியா

    மீசையை முறுக்கி காட்டும் காமஹாசன் எங்கே?.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    விண்மீன்கள் நதிமீன்கள் ஆவார்களா? ரசிகர்கள்தான் விடுவார்களா? இருட்டில் இருந்து ஒளித்திரையை ரசிக்கும் ரசிகசிகாமணிகள் இருக்கும் வரை நடிகர், நடிகைகளுக்கு என்ன குறை?

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    அடுத்த படம் ரெடி. ரசிகர்கள் பாக்கட் காலியாக சிறந்த வாய்ப்பு. கழுத்தளவு தண்ணீரில் நின்றாலும், தாய் தகப்பன் கழுத்தளவு கண்ணீரில் நின்றாலும் தலையுயர்த்தி பேனர்களையும் பார்த்து மெய்சிலிர்த்து போகிற அறிவார்ந்த ரசிகர்கள் இருக்கும்வரை பெருநடிகர்கள் வீதிக்கு வரமாட்டார்கள்.

  • HoneyBee - Chittoir,இந்தியா

    இவ்வளவு கோடிகள் வசூல் என்று போட்டி போட்டு கொண்டு வருவார்கள். வாயில வடை சுடும் கூட்டம்.. அவ்வளவு தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement