Load Image
Advertisement

சோலார் மின் உற்பத்தி திட்ட வழிகாட்டுதல்... வெளியீடு நேரடியாக விண்ணப்பித்து மானியம் பெறலாம்

 Solar Power Generation Project Guideline... Release Apply directly and get grant சோலார் மின் உற்பத்தி திட்ட வழிகாட்டுதல்... வெளியீடு நேரடியாக விண்ணப்பித்து மானியம் பெறலாம்
ADVERTISEMENT
புதுச்சேரி : வீடுகளில் சூரியஒளி மின் உற்பத்தியை5 மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ள புதுச்சேரி அரசின் மின் துறையானது,மானியம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


புதுச்சேரி மாநிலத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலத்தில், மின்சார தேவை 585.81 மெகா வாட்.

சராசரியாக தினசரி 520 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு வருகிறது.

இதுமட்டுமின்றி வீடுகளில் 2 மெகா வாட், வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் 45 மெகா வாட் என, மொத்தம் 47 மெகா வாட் சூரியஒளி மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய வழிகாட்டுதல்



சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. வரும் 2026ம் ஆண்டிற்குள் வீடுகளில் சூரிய ஒளிமின் உற்பத்தியை 5 மெகா வாட்டாக உயர்த்த புதுச்சேரி அரசு மின் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வீடுகளின் மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றத்தினை பட்டியலிடப்பட்டுள்ளது.

மாற்றம் என்ன



கடந்த காலங்களில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மூலமாக வீடுகளில் சோலார் பேனல்கள் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக பொருத்தப்பட்டன. மின் நுகர்வோர்களுக்கான மானியத்தை கழித்து கொண்டு, ஒப்பந்த நிறுவனங்களுக்கு நேரடியாக சோலார் பேனல்கள் நிறுவனதற்கான கட்டணம் வழங்கப்பட்டது.

அடுத்து சூரிய ஒளி திட்டம் புதுச்சேரி அரசின் மின் துறையிடம் சென்றது. மின் துறையின் போர்ட்டலில் விண்ணப்பித்து சூரிய ஒளி மின் உற்பத்திக்கான பேனல்கள் பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் சரிவர செயல்படுத்த முடிவில்லை.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி நேரடியாக சூரியஒளி மின் உற்பத்தி மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வீடுகளில் சூரிய ஒளி பேனல்கள் பொருத்த விரும்புவோர், மத்திய புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் https://solarrooftop.gov.in என்ற போர்ட்டலில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் புதுச்சேரி மின்துறைக்கு பரிந்துரை செய்யும். மின் துறை அதிகாரிகள் வீட்டினை பார்வையிட்டு பேனல்கள் பொருத்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவர். அதன்படி 120 நாட்களுக்குள் வீடுகளில் சூரிய ஒளி பேனல்கள் பொருத்தி, மின் உற்பத்தியை ஆரம்பிக்கலாம்.

18 நிறுவனங்கள்



பின் வீடுகளில் பேனல்கள் பொருத்தியதற்கான ஆவணங்களை மீண்டும் மத்திய புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால், நேரடியாக மின்நுகர்வோரின் வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்படும்.

வீட்டின் மாடியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை மின்துறை தொகுப்புக்கு வழங்கலாம்.

இதற்கான தொகை கணக்கில் வைத்துக் கொள்ளப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த, வீட்டின் மாடியில் சோலார் கருவிகளை பொருத்தி மின் நிலையத்தை அமைத்து தரும் 18 நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகளை மின்துறை பட்டியலிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் ஒன்றை தேர்வு செய்து, வீடுகளில் சூரிய ஒளி உற்பத்தி திட்டத்திற்கு மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு மானியம்

வீடுகளின் சூரிய ஒளி மின்சார திட்டத்தில்,1 கிலோ வாட்டில் இருந்து, 3 கிலோ வாட் வரையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு ஒரு கிலோவாட்டிற்கு 14,588 ரூபாய் வீதம் மானியம் அளிக்கப்படும். 3 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் ஒவ்வொரு கிலோவாட்டிற்கும் 7,294 ரூபாய் மானியம் கிடைக்கும்.சூரியஒளி மின்உற்பத்தி திட்டத்தில் முதலீடு செய்த தொகையை மூன்று ஆண்டுகளில் எடுத்துவிடலாம். அதன் பிறகு அனைத்தும் லாபம் என்பது குறிப்பிடதக்கது.வீடுகளில் சூரிய ஒளிமின் உற்பத்தி திட்டத்தில் இணைய ee7ped@py.gov.in அல்லது 94870 80370 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



வாசகர் கருத்து (1)

  • Sekar KR - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் நடக்காது. எனது நண்பர் OMR padur EB office இல் லஞ்சம் கொடுக்காமல் பெயர் மாற்றம் செய்து காண்பிக்கின்றேன் என்று சவால் விட்டு மூன்று மாதத்திற்கு மேலாக அலக்களித்து இது வரை மாற்ற முடியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement