Load Image
Advertisement

தேசிய நினைவிடம் கட்ட பழமையான கட்டடம் இடிப்பு

Maharashtra, Mahatma Jyotiba Phule: Demolition of old building to build National Memorial    தேசிய நினைவிடம் கட்ட பழமையான கட்டடம் இடிப்பு
ADVERTISEMENT


புனே, சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலே, அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு தேசிய நினைவிடம் கட்டுவதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பழமை வாய்ந்த பிடே வாடா கட்டடத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு புனே மாவட்டத்தின் புத்வார் பெத் என்ற பகுதியில், பிடே வாடா என்ற பழமைவாய்ந்த கட்டடம் அமைந்துள்ளது. இங்கு தான், 1848ல், சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலே, அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே ஆகியோர், பெண்களுக்கான முதல் பள்ளியை துவங்கினர்.

இந்த கட்டடத்தில் கடை நடத்தி வந்த உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள், இடத்தை காலி செய்ய மறுத்து, நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தில் தேசிய நினைவிடம் கட்ட புனே நகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி அளித்ததோடு, கடைகளை காலி செய்யும்படி வியாபாரிகளுக்கு உத்தரவிட்டன.

கடைகளை காலி செய்ய வழங்கப்பட்ட ஒரு மாத அவகாசம் முடிவுக்கு வந்ததை அடுத்து, பழமை வாய்ந்த பிடே வாடா கட்டடத்தை, நேற்று அதிகாலை புனே நகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக இடித்து தள்ளியது.

இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது குறித்து, புனே நகராட்சி கூடுதல் கமிஷனர் விகாஸ் தக்னே நேற்று கூறியதாவது:

வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வந்ததை அடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கப்பட்டது. விரைவில் தேசிய நினைவிடம் அமைக்கும் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement