Load Image
Advertisement

நான்கு மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும்(டிச.,06) விடுமுறை அறிவிப்பு

 Holiday announcement for schools and colleges today   நான்கு மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும்(டிச.,06) விடுமுறை அறிவிப்பு
ADVERTISEMENT

சென்னை : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், இன்று(டிச.,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, கடந்த இரண்டு நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மழை குறைந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளதால், இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கும், தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Ram pollachi -

    ஏய் பாப்பா மழையில் இப்படி நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும்... போய் ஓரமா நில்லு...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement