Load Image
Advertisement

ஆட்சி மாறியும் காட்சி மாறல

Government change does not change the scene   ஆட்சி மாறியும் காட்சி மாறல
ADVERTISEMENT

''ஆட்சி மாறியும், காட்சி மாறலைங்க...'' என, இஞ்சி டீயை உறிஞ்சியபடியே விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கோவை மாநகராட்சியில, 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள், 2,129 நிரந்தர பணியாளர்கள் இருக்காங்க... திடக்கழிவு மேலாண்மை பணிகள்ல, தற்காலிக துாய்மை பணியாளர்கள் தான் ஈடுபடுறாங்க...

''நிரந்தர பணியாளர்களுக்கு பூங்கா, குளக்கரை துாய்மை உள்ளிட்ட பணிகளை மட்டும் ஒதுக்குறாங்க... இதுக்கு மத்தியில, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, துாய்மை பணியாளர்களாக சேர்ந்த, 325 பேர், இதுவரை அலுவலக பணிகள்ல மட்டும் காலத்தை கழிக்கிறாங்க...

Latest Tamil News
''இவங்க யாரும் துாய்மை பணிகள்ல ஈடுபடுறது இல்லைங்க... இதனால, களப்பணியில இருக்கிறவங்க, 'ஆட்சி மாறியும் காட்சி மாறலை'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''திருடு போன வாகனத்தை மீட்க முடியாம தவிக்கிறாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னை, தாம்பரம் அடுத்துள்ள மறைமலை நகர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், தன் பைக்கை காணலைன்னு, மறைமலை நகர் போலீஸ்ல புகார் குடுத்தாரு... புகாருடன், யார் திருடிட்டு போனதுங்கிற, 'சிசிடிவி' கேமரா ஆதாரம் மற்றும் பைக் இப்ப எங்கே இருக்குதுங்கிற போட்டோ ஆதாரங்களை குற்றப்பிரிவு போலீசாரிடம் குடுத்தாரு பா...

''புகாரை வாங்கிய ரெண்டு பெண் போலீசார், 'இதை எடுத்துட்டு போனது, நமக்கு தெரிஞ்ச தம்பி தான்... நாங்க பேசி வாங்கி தர்றோம்'னு சொல்லி காலம் கடத்தியிருக்காங்க பா...

''இடைப்பட்ட நாட்கள்ல, பைக்கை திருடியவங்க, அதை பயன்படுத்தி, செங்கல்பட்டு பகுதியில செயின் பறிப்புல ஈடுபட்டு, அந்த ஊர் போலீஸ்ல சிக்கிட்டாங்க... அந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் பண்ணிட்டாங்க...

''இதனால, பைக்கை திருடு கொடுத்தவர், அதை எப்படி திருப்பி வாங்குறதுன்னு தெரியாம, முழியா முழிச்சிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.


வாசகர் கருத்து (1)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    வேறென்ன பண்றது ? யானை வாயிலே போன கரும்பும் முதலை வாயில் போன மீனையும் போல போனவை திரும்பி வராது என்று தலை முழுகி வேண்டியது தான்.. போலீசாரை நம்பி தொலைந்த பைக் திரும்பி வரும் என்று நம்பினால் மிஞ்சுவது ஏமாற்றம் தான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement