Load Image
Advertisement

தேர்தல் தோல்வி எதிரொலி : கட்சி பதவியை உதறிய முதல்வர்

 Election defeat reverberates with the Chief Minister resigning from the party post   தேர்தல் தோல்வி எதிரொலி : கட்சி பதவியை உதறிய முதல்வர்
ADVERTISEMENT
அய்ஸால் :மிசோரம் சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக, தற்போதைய முதல்வர் ஜோரம்தங்கா, 79, தான் 33 ஆண்டுகளாக வகித்து வந்த மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் முதல்வர் ஜோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி உள்ளது.

நான்கு இடங்கள்



இங்குள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான ஓட்டுகள் டிச. 03-ம் தேதி எண்ணப்பட்டன.

இதில், ஜோரம் மக்கள் இயக்கம், 27 இடங்களில் அபார வெற்றி பெற்றது. ஆளும் மிசோ தேசிய முன்னணி, 10 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற பா.ஜ., தற்போது இரண்டு இடங்களை கைப்பற்றி உள்ளது.

கடந்த தேர்தலில் நான்கு இடங்களில் வென்ற காங்., தற்போது ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில், முதல்வர் ஜோரம்தங்கா தோல்வியடைந்தார். அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களில், ஒன்பது பேர் தோல்வியை தழுவினர்.

இதையடுத்து, கவர்னர் ஹரி பாபு கம்பம்படியைச் சந்தித்து, பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை, முதல்வர் ஜோரம்தங்கா அளித்தார்.

இந்நிலையில், தன் கட்சி தலைவர் பதவியையும் நேற்று ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் தன் கட்சிக்கு எழுதிய கடிதத்தில், 'சட்டசபை தேர்தலில் மிசோ தேசிய முன்னணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று, என் கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

வலியுறுத்தல்



இந்த கட்சியின் தலைவராக ஜோரம்தங்கா, 1990ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

எனினும், அவரது ராஜினாமா குறித்து முடிவெடுக்க அக்கட்சியின் தேசிய குழு கூட்டம் இன்று கூட உள்ளது.பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள், அவரது ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.



வாசகர் கருத்து (4)

  • இளந்திரயன், வேலந்தாவளம் -

    சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாநிலம்... ஆகவே பிரதமர் பிரச்சாரம் செய்யும் மேடையில் ஒன்றாக வரமாட்டேன் என்று சொன்ன அதிமேதாவி... தோற்றத்தில் மகிழ்ச்சிதான்.. அதே சமயம் பாஜக போன தடவை விட அதிக வாக்குகளை பெற்றுரிக்கிறது

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சொரணை உள்ள மனுஷன் போலிருக்கு. நம்ம ஆளுன்னா மக்கள் எங்களை நிராகரிக்கவில்லை ஓய்வுக்காக இடைவேளை கொடுத்திருக்கிறார்கள் அதனால தலைமை பதவியை கெட்டியாக பிடித்து கொள்கிறான் என்று விடுவான் பாருங்க.

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    ஆணவத்தின் உச்சத்திற்ற்கு சென்று மோடிஜியை பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என்று சொன்ன அதிமேதாவி இவர்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மானமுள்ள முதல்வர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement