Load Image
Advertisement

பள்ளியில் ஆசிரியரை வெட்டிய 2 மாணவர்கள் கைது

Two students arrested for cutting teacher at school   பள்ளியில் ஆசிரியரை வெட்டிய 2 மாணவர்கள் கைது
ADVERTISEMENT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ். ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாமிநத்தத்தைச் சேர்ந்த கடற்கரை, 42, பொருளாதார ஆசிரியர். அரையாண்டு தேர்வுக்கு தயாராகும் வகையில் நன்றாக படிக்க சொல்லி மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

டிச., 2 சனிக்கிழமையன்று பிளஸ் 1க்கு சிறப்பு வகுப்பு வைத்தார். அன்று ஒரு மாணவர் தாமதமாக வந்ததற்காக ஆசிரியர் திட்டினார். ஆத்திரம் அடைந்த அவர் நேற்று சக மாணவருடன் அரிவாள், கத்தியுடன் பள்ளிக்கு வந்தார். ஆசிரியர் கடற்கரை காலை 11:30 மணிக்கு ஓய்வறையில் இருந்தார். அங்கு வந்த இரு மாணவர்களும் ஆசிரியரை தலை, கையில் வெட்டி தப்பினர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஏ.டி.எஸ்.பி., முருகேசன், டி.எஸ்.பி., தனஜெயன் விசாரித்தனர். அந்த இரு மாணவர்களும் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து பின் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பிளஸ் 1 படிக்க இங்கு சேர்ந்துள்ளது தெரிந்தது. திருத்தங்கல் பெரியார் காலனி காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த போது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

டி.எஸ்.பி., கூறுகையில், 'கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் விசாரிக்கையில் பொதுவாகவே ஆசிரியர் சரியாக படிக்காத மாணவர்களை திட்டி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆசிரியரை வெட்டியதாக கூறினர்' என்றார்.

மணிப்பூரில் இரு தரப்பினர் மோதல்: 13 பேர் பலி



நம் அண்டை நாடான மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தெங்நவ்பால் மாவட்டத்தில் உள்ள லெய்து கிராமத்தில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சென்ற போது, யாரும் அங்கு காணப்படவில்லை. பின்னர், 13 உடல்கள் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதியில் தங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படை இயக்கத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 13 பேர் கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இறந்தவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த மக்கள் விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரயில்களில் கைவரிசை காட்டிய மும்பை கொள்ளையன் கைது



சென்னை - திருவனந்தபுரம், ஏற்காடு எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி உட்பட, ஆறு ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறி வைத்து, மர்ம நபர் நகை, பொருட்களை திருடி வந்தார். கடந்த அக்., நவ., மாதங்களில் ஆறு பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.

இச்சம்பவத்தில் மும்பை, தானே பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஷாகுல்ஹமீது, 43, என்பவர் ஈடுபட்டதை, போலீசார் உறுதி செய்தனர். இவர் ரயில்களில் கொள்ளை அடிக்கும் நகைகளை மும்பை, கேரளாவில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, சேலம் ரயில்வே ஜங்ஷன் பயணியர் காத்திருப்பு அறையில், கைவரிசை காட்ட தயாரான ஷாகுல் ஹமீதை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 22 சவரன் நகைகள், நான்கு மொபைல் போன்கள், 5,000 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூலி தொழிலாளி வெட்டிக்கொலை



திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே வட்டக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர், 35. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு, ராமையன்பட்டியில் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு ராமையன்பட்டியில் ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் சுபாஷ் சங்கர் ஒருவரை அரிவாளால் வெட்டினார். அது தொடர்பாக, அவருக்கு கொலை மிரட்டல் இருந்தது. போலீசார் அறிவுறுத்தலின்படி அவர், சுத்தமல்லியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.7.32 லட்சம் மோசடி



சிவகங்கை மாவட்டம் மேல பூங்குடியைச் சேர்ந்தவர் ஆதீஸ்வரி 23. இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு தேடியுள்ளார். @vinod26031988 என்ற ஐடியில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அதை நம்பிய ஆதீஸ்வரி அவர் கூறிய வங்கி எண்ணிற்கு 7 தவணைகளில் ரூ.7 லட்சத்து 32 ஆயிரத்து 720 அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தையும் கொடுக்கவில்லை. முதலீடு பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆதீஸ்வரி , சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மோசடி நபரை தேடுகின்றனர்.



வாசகர் கருத்து (20)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இவனுகளை எல்லாம் ஒரு பத்து வருஷ கட்டாய ராணுவ சேவையில் வெக்கணும் அல்லது 20 வருட ஜெயில் தண்டனை கொடுக்கணும்.இல்லையென்றால் இவனுகளால் நாட்டுக்கு வருங்காலத்தில் பேராபத்து தான்.++இப்படி பட்டவனுவ திருந்தும் வாய்ப்பே நிச்சயம் கிடையாது.

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இந்தக் கழிசடைகளுக்கு "'மாணவன்"" என்ற பெயர் எதற்கு? பெரிசா சட்டம் ஒன்னும் தண்டனை கொடுக்காதுன்னு தெரிஞ்சே தான் செய்யறானுவ+++மக்கள் வரிப் பணத்தில் A டு Z எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, சோற்றை போட்டு, லேப் டாப் சைக்கிள் கொடுத்து படிக்கச் சொன்னால் அந்த சொகுசு அவனை படிக்க விடுமா? மிச்சப்ப படுத்திய பணத்தில் ரிலீசான அன்னிக்கே சினிமாவ பாத்தாகணும் .+++இவனுகளெல்லாம் நாட்டுக்கே சுமை இல்லையா? சிறார் சட்டத்தில் வயது வரம்பை 10 என ஆக்கினால் தான் பிழைக்கலாம்++ அதுக்கு முன்னாடியே தான் அவனுகளுக்கு எல்லாம் அத்துப்படி ஆகுதே?

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    அரசு பள்ளிதானே ???? பிடிக்கலைன்னா நாசமா போறான் ...... நீங்க ஏன் கண்டுக்குறீங்க ????

  • நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா

    ஆசிரியர்களுக்கு தி மு க கட்சிதான் பிடிக்கும்...

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    தமிழக பள்ளிகளின் மாணவச் செல்வங்களுக்கு மத்தியில், திராவிடியா மாடல் நல்லாவே வேலை செய்யுது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement