Load Image
Advertisement

86 விரைவு ரயில்கள் ரத்து

 Service cancellation of 86 express trains    86 விரைவு ரயில்கள் ரத்து
ADVERTISEMENT
சென்னை : புயல் மற்றும் கனமழை பாதிப்பால், 86க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

'மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழையால், எழும்பூர், தாம்பரம், ஆவடி, பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில், ரயில் பாதைகள் நீரில் மூழ்கின.

இதனால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் நேற்றைய சேவையில் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், சில விரைவு ரயில்கள் பாதுகாப்பு காரணமாக மெதுவாக இயக்கப்பட்டன.

86 ரயில்கள் ரத்து



சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை, பெங்களூரு, திருப்பதி, ஆலப்புழா, சென்னை - கோவை வந்தே பாரத், சென்னை - புதுச்சேரி, சென்னை - மைசூரு, புதுச்சேரி - திருப்பதி, சென்னை - மேட்டுப்பாளையம், சென்னை - போடிநாயக்கனுார், செங்கல்பட்டு - காச்சிகுடா, சென்னை - திருவனந்தபுரம், சென்னை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு.

சென்னை - ஈரோடு, கொல்லம் - எழும்பூர், சென்னை - மங்களூரு, சென்னை - தஞ்சாவூர், சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டிய, 86க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் நேற்றைய சேவை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், சில விரைவு ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, திருவள்ளூர், ஆவடி, சென்னை கடற்கரை, அரக்கோணத்தில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

மாற்றம்



இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:



மூன்று நாட்களில், 230க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

ரயில்கள் ரத்துக்கான கட்டணத்தை, கவுன்டர்களில் பயணியர் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் இருந்து இன்று புறப்படும் ரயில்களின் சேவையில், இதுவரையில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், புயல் தாக்கத்தை பார்த்த பின், ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தேவை இல்லாத அனாவசிய ரயில் பயணத்தை மக்கள் இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்