Load Image
Advertisement

என் வீடு முழுதும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.,வுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள்

 My house is full of water: Actor Vishal appeals to MLAs to take action   என் வீடு முழுதும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.,வுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள்
ADVERTISEMENT
சென்னை: என் வீட்டிலேயே மழைநீர் தேங்கியுள்ளது எனக்கு ரொம்ப கேவலமாக உள்ளதாக நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ.,வுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக நகர வெள்ளக்காடானது,. இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டினை மழைநீர் சூழ்ந்தது.

இதையடுத்து நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ: எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.

இப்ப நான் அண்ணா நகரில் தங்கிட்டு இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க. .மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க. இவ்வாறு அந்த வீடியோல் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (31)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    தமிழில் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பேச கற்று கொள்வது நல்லது. அவர்களுக்கு எப்படி பேசுவது என்று தெரியாதது காரணமாக இருக்கலாம்.

  • jagan - Chennai,இலங்கை

    பாவம்பா நடிகர் வீட்டில் தண்ணி வந்துடுச்சாம், அரசு நிவாரண நிதியில் இருந்து நடிகர்களுக்கு முதலில் அதிக நிவாரணம் அழிக்கவேண்டும் . ஏன் என்றால் தமிழ் நட்டு காரங்க எல்லாம் சினிமா பைத்தியங்கள், அடிச்சு கழுவ தண்ணி இருக்கோ இல்லையோ சினிமா வேண்டுமே அவர்களுக்கு

  • Niyamathulla - Viruddhachalam,இந்தியா

    மழைக்கு தெரியாது விஷால் வீடு என்று. விஷால் இப்படி பேசுறது சரியில்லை. பொறுமை விஷால் அவர்களே.

    • meenakshisundaram - bangalore,இந்தியா

      விஷால் ஆந்திராக்காரர் -தைரியமாக உள்ள நிலையை சொல்லி யுள்ளார் .நம்ம நடிகர்கள் கற்றுக்கொள்ளட்டும்

  • venkatakrishna - Trichy,இந்தியா

    விஷால் என்றால் மழை பயப்பிடுமா? இயற்கையை எதிர்கொள்ள வேண்டும்

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அதென்ன என் வீட்டிலையே... எனது வீட்டிலும் என சொல்லலாமே.. நீ என்ன ராணுவ தளபதியா? அமைச்சரா? அரசு அதிகாரியா? மாநகராட்சி பணியாளரா?

    • Thamizhan - Doha,கத்தார்

      இத சொல்ல இந்த ஆந்திராகாரனுக்காவது கொஞ்சம் சூடு சொரணை இருக்கேன்னுட்டு பாராட்டனும். நம்மூரு ஆட்டக்காரனுங்க எங்கே போனானுங்கன்னே தெரியலையே. அவனுங்களுக்கென்ன வெளிநாட்டில் ஓய்வெடுக்க தப்பிச்சு போயிருப்பானுங்க. மக்களே.. இப்பவாவது, இனிமேலாவது மாத்தி யோசிங்க. திராவிடத்தனம் இல்லாத அரசு முக்கியம்...போதும், பட்டது போதும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement