Load Image
Advertisement

வெள்ளத்தில் தத்தளிக்குது சென்னை: வீட்டுக்குள் தண்ணீர்: பொதுமக்கள் கண்ணீர்

Michaung cyclone: Chennai reeling under floods: Water inside houses: People in tears  வெள்ளத்தில் தத்தளிக்குது சென்னை: வீட்டுக்குள் தண்ணீர்: பொதுமக்கள் கண்ணீர்
ADVERTISEMENT
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, தாம்பரம், வேளச்சேரி, பட்டினம்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டுக்குள் மழை நீர் சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடும் அளவில் பாதிக்கப்பட்டன. மழைநீர் தேங்கிய இடங்களில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆலந்தூர் மெட்ரோ ரயிலை பொதுமக்கள் பயன்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அரும்பாக்கம், வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 10க்கும் மேற்பட்ட சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கே புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிக்கரணையில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. இரும்புலியூர் நகர் குடியிருப்புப் பகுதி, வேளச்சேரியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீட்டுக்குள் மழை நீர் சென்றதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அடுக்குமாடி குடிப்பிருப்புகள், சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் மழை நீரில் மூழ்கிவிட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதில் சிறிது சிரமம் ஏற்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


தடை
மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


47 ஆண்டுகளுக்கு பின்
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை கடந்த 2015ம் ஆண்டு கொட்டிய மழையை மிஞ்சிவிட்டது. 2015ம் ஆண்டு 33 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் தற்போது 34 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 1976ம் ஆண்டு சென்னையில் 45 செ.மீ மழை பதிவாகி இருந்தது. தற்போது 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.வாசகர் கருத்து (20)

 • Balu - Ernakulam,இந்தியா

  யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி >>>

 • Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா

  மழை நீர் சாலைகளில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடியது. அதையும் தாண்டி மக்களின் ஆனந்தக்கண்ணீர் பெருமளவில் இருந்ததால் சென்னையில் பல வீடுகளுக்குள் தேங்கிய நீர் வெளியேறமுடியாமல் வெள்ளக்காடாக ஆனது. 2015 ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு எத்தனை ஆயிரம் கோடிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. அப்படி முறையாக பணிகள் நடைபெற்றிருந்தால் பாதிப்புகள் இந்த அளவிற்கு இருக்க கூடாதே.

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  This government doesn't care about people. Only agenda loot. What happened to 4k crores

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  உலகில் எல்லா இடங்களுக்கும் இதுபோல மழை கொட்டி இருக்கிறது. ஆனால் நல்ல அரசுகள் ஆண்ட இடங்களில் அரைநாளில் நிலைமை சகஜமாகிவிடும். திரும்ப அதே பிரச்சினை வராது. ஆனால் இங்கு இந்த மழை வெள்ளம் பிரச்சினையை வைத்து, ஊதி ஊதி பெருசாக்கி (காவிரி பிரச்சினை போல) காலம் காலமாக அரசியல் (பின்னே அவியலா - முதல்வர்) செய்வார்கள்.

 • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

  F4 car race govt spent 240 crores by remodeling existing good road. Once car race is over again Govt will spent 250 crores for reconstruction of road. Txs to Dravida model

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்