Load Image
Advertisement

தண்டோராவால் திரும்ப கிடைத்தது 15 பவுன் நகை, ரூ.3.15 லட்சம்: திருட்டு பொருளை மீட்பதிலும் திருமங்கலம் பார்முலா

15 pound jewelery recovered by Tandora, Rs 3.15 lakh: Thirumangalam formula in recovering stolen goods     தண்டோராவால் திரும்ப கிடைத்தது 15 பவுன் நகை, ரூ.3.15 லட்சம்: திருட்டு பொருளை மீட்பதிலும் திருமங்கலம் பார்முலா
ADVERTISEMENT
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் சமயநல்லுார் அருகே வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.4.45 லட்சம் திருடுபோன சம்பவத்தில் கிராம மக்கள் பேச்சு நடத்தி, தண்டோரா மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து திருடு போன வீட்டு வாசலில் நகை மற்றும் பணம் திரும்ப வந்து சேர்ந்தது.

சமயநல்லுார் அருகே கள்ளிக்குடியைச் சேர்ந்த கண்ணன் 32, வாசர் கம்பெனி வைத்துள்ளார். நவ., 29ல் இவரது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.4.45 லட்சம் திருடு போனது.

சமயநல்லுார் போலீசார் விசாரித்தனர். கிராம பெரியவர்கள் ஒன்றுகூடி பேசினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விநாயகர் கோயில் முன்பு பெரிய 'டிரம்' வைத்து வீடுகள் தோறும் பேப்பர் கவர் கொடுத்தனர். திருடியவர்கள் நகை, பணத்தை கவரில் வைத்து 'டிரம்மில்' போட்டு விட வேண்டும் என தண்டோரா அறிவிப்பு செய்தனர்.

இதையடுத்து இரவில் 'கரண்ட் கட்' செய்யப்பட்டது. காலையில் எழுந்து பார்த்த போது திருடுபோன கண்ணன் வீட்டு வாசலில் 15 பவுன் நகைகள், ரூ.3.15 லட்சம் கவரில் கிடந்தது. நவ.,24ல் மதுரை திருமங்கலம் பெரிய பொக்கம்பட்டியில் வீட்டில் நகை திருடு போன சம்பவத்திலும் இதேபோல கிராம மந்தையில் அண்டா வைத்து நகை மீட்கப்பட்டது.

அதே 'பார்முலாவை' சமயநல்லுார் பகுதியிலும் பின்பற்றி நகையை மீட்டுள்ளனர். இடைத்தேர்தலை அடுத்து திருட்டு சம்பவத்திலும் திருமங்கலம் பார்முலா' என தற்போது இந்த நிகழ்வு டிரெண்டாகியுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நல்லதுக்கும் திருமங்கலம் பார்முலா கெட்டதற்கும் அதே பார்முலா? குழப்பமாக உள்ளதே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement