Load Image
Advertisement

டாஸ்மாக், ரேஷன் கடைக்கு இன்று விடுமுறை

 Today is a holiday for Tasmac, ration shops     டாஸ்மாக், ரேஷன் கடைக்கு இன்று விடுமுறை
ADVERTISEMENT


சென்னை : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், டாஸ்மாக் மற்றும் ரேஷன் கடைகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 767 மதுக்கடைகள் உள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கையாக இந்த மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

முறைகேடாக மதுவிற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதேபோல, நான்கு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. புயல் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள், இந்த கடைகளுக்கு வருவதை தவிர்ப்பதற்காக, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    டாஸ்மாக் லீவு இரண்டு ஆண்டுகால ஆட்சியில் ஒரே நல்ல காரியம்....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கொடுத்தால், தமிழக பொருளாதாரம் என்னவாகும்? யோசித்தீர்களா...?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement