Load Image
Advertisement

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.,க்களுக்கு கெடு?

 Harm to the MPs who contested and won the assembly elections?    சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.,க்களுக்கு கெடு?
ADVERTISEMENT


புதுடில்லி, : ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.,க்கள், தாங்கள் வகிக்கும் ஏதேனும் ஒரு பதவியை, 14 நாட்களுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் பட்டேல், பஹான் சிங் குலாஸ்தே உட்பட 27 எம்.பி.,க்கள் போட்டியிட்டனர். இதில், மத்திய பிரதேசத்தில் 12 பேரும், ராஜஸ்தானில் எட்டு பேரும், சத்தீஸ்கரில் நான்கு பேரும், தெலுங்கானாவில் மூன்று பேரும் களமிறங்கினர்.

இவற்றில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.பி.,க்கள், தாங்கள் வகிக்கும் ஏதேனும் ஒரு பதவியை, அடுத்த 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து லோக்சபா முன்னாள் செயலர் பி.டி.டி.ஆசாரி கூறுகையில், ''ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகிப்பதை தடுக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 101வது பிரிவில் விதிகள் உள்ளன. இதன்படி தற்போது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.பி.க்களின் பதவி, அடுத்த 14 நாட்கள் வரை நீடிக்கும். அதன்பின் அவர்கள் தங்கள் பதவியை இழக்க நேரிடும். எனினும், சட்டசபை உறுப்பினர் பதவியில் அவர்கள் நீடிப்பர்,'' என்றார்.



போட்டியிட்ட எம்.பி.,க்கள்

வெற்றி

பிரகலாத் சிங் பாதல், பா.ஜ., மத்திய அமைச்சர் - ம.பி.,

நரேந்திர சிங் தோமர், பா.ஜ., மத்திய அமைச்சர் - ம.பி.,

மகந்த் பாலக்நாத், பா.ஜ., - ராஜஸ்தான்

பாகிரத் சவுத்ரி, பா.ஜ., - ராஜஸ்தான்

---

தோல்வி

பாகன் சிங் குலஸ்தே, பா.ஜ., மத்திய இணையமைச்சர் - ம.பி.,

விஜய் பாகல், பா.ஜ., - சத்தீஸ்கர்


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    எம்.பி பதவி இன்னும் ஒரு வருசம் தானே... அதனால எம்.எல்.ஏ வா பதவி ஏற்று அடுத்த அன்ஹ்சு வருஷம் ஆட்டையப் போடலாம். நமது உதவாக்கரை சட்டங்களில்.இதுவும் ஒன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement