Load Image
Advertisement

டில்லியில் நாளை மறுநாள் இண்டியா கூட்டணி அவசர ஆலோசனை!

 In Delhi, the day after tomorrow, India alliance... Urgent consultation!     டில்லியில் நாளை மறுநாள் இண்டியா கூட்டணி அவசர ஆலோசனை!
ADVERTISEMENT
புதுடில்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை மறுநாள் புதுடில்லியில் நடத்தப்படும் என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் தோற்கடிக்கும் முடிவில் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கின.

இதில், காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., தேசிய மாநாட்டு கட்சி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 28 கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்த கூட்டணியின் முதல் கூட்டம், கடந்த ஜூனில் பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்தது.

மாபெரும் பேரணி



இதைத் தொடர்ந்து அடுத்த கூட்டம், ஜூலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்தது. அப்போது தான், இந்த கூட்டணிக்கு 'இண்டியா' அதாவது இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என பெயரிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து மூன்றாவது கூட்டம், மஹாராஷ்டிராவின் மும்பையில் ஆக., 31 மற்றும் செப்., 1ல் நடந்தது.

இதையடுத்து, அக்டோபர் முதல் வாரத்தில் இண்டியா கூட்டணி சார்பில், மத்திய பிரதேசத்தின் போபாலில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது.

அக்டோபர் முதல் வாரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம், தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம், புதுடில்லியில் நாளை மறுநாள் நடக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு கடிதத்தை கூட்டணி உறுப்பினர்கள் அனைவருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அனுப்பி வைத்தார். இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.Latest Tamil News

அதே சமயம், அடுத்த ஆண்டு நடக்கஉள்ள லோக்சபாவில், பா-.ஜ.,வை அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு



கடந்த அக்டோபரில் ரத்து செய்யப்பட்ட கூட்டணியின் பேரணியை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளில், தெலுங்கானாவில் மட்டும் இந்த கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுநாள் கூடும் அடுத்தக்கட்ட கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்., தோல்வி ஏன்?

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதில், தெலுங்கானாவை தவிர மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இது, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது. இது, நாளை மறுநாள் நடக்கும் இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் மேற்கொண்ட பிரசாரங்கள் தோல்வியை பரிசாக தந்துள்ளன. குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி துவங்கி காஷ்மீர் வரை அக்கட்சி எம்.பி., ராகுல் மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரையும், அக்கட்சிக்கு தெலுங்கானா தவிர வேறெங்கும் கைகொடுக்காமல் போனது ஏமாற்றமே. கூட்டணியில் உள்ள தி.மு.க.,வின் சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு, கூட்டணியில் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மூன்று மாநிலத்தில் தோல்வியை சந்தித்தற்கு அதுவும் ஓர் காரணம் என கூறப்படுகிறது.'காங்கிரசின் இந்த தோல்வி இண்டியா கூட்டணியின் தோல்வி அல்ல' என, கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளார். தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் சரத் பவாரோ, 'இந்த தோல்வி, இண்டியா கூட்டணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும்' என கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (19)

  • அப்புசாமி -

    ராகுலின் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. காங்கிரசில்.பழையெ பெருச்சாளிகளுக்கு ஓய்வு குடுத்துட்டு புது ஆளுங்க வந்து உழைக்கணும்.

  • A1Suresh - Delhi,இந்தியா

    வெலவெலத்து போயுள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நாள்கள் எண்ணப்படுகின்றன . சோனியா - கெஜ்ரிவால் வரிசையாக காத்திருக்கின்றனர்

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    கூட்டணி களைப்பு பற்றி அதிகாரப்பூர்வ செய்தி வரும் அல்லது திமுகவை கூட்டணியில் இருந்து நீக்குவது பற்றிய செய்தி வரும்.

  • Gopalan - ,

    இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கப் போவது யார்? திரு உதயநிதியுடன் திரு ஸ்டாலின் கலந்து கொள்வாரா அல்லது திரு உதயநிதியை மட்டும் கலந்து கொள்ள அனுப்புவாரா ??

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    மத்த ஸ்டேட்டலேயும் பிஜேபிய ஜெயிக்க வைப்பது எப்படின்னு மீட்டிங் பண்ணறாங்களாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement