Load Image
Advertisement

ம.பி., ராஜஸ்தானோடு , சத்தீஸ்கரையும் கைகொண்ட பா.ஜ., 3:1 வெற்றி!: தெலங்கானாவில் முதன் முறையாக காங்., அபார சாதனை



புதுடில்லி:ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில், நேற்று முடிவுகள் வெளியான நான்கு மாநிலங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரை பா.ஜ., கைகொண்டது. தெலுங்கானாவில், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு அதிர்ச்சி அளித்து, அங்கு முதல் முறையாக காங்கிரஸ் அபார வெற்றியை பெற்றுள்ளது.

Latest Tamil News


Tamil News
Tamil News
Tamil News
லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில், நான்கு மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.

Latest Tamil News

வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இன்று ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த சட்டசபை தேர்தல்களில், நான்கில் மூன்றை பா.ஜ., வென்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த துடன், காங்கிரசிடம் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரையும் பா.ஜ., கைப்பற்றியது.

நேரடி மோதல்



இந்த மூன்று மாநிலங்களிலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதல் இருந்தது. கடந்த 2018 தேர்தலின்போது, இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்றிருந்தது. உட்கட்சி மோதலால் மத்திய பிரதேசத்தில், 2020ல் ஆட்சியை அது இழந்தது.

இந்த ஐந்து மாநிலங்களில், 84 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மத்திய பிரதேசத்தில், 29, சத்தீஸ்கரில் 11, ராஜஸ்தானில் 25, தெலுங்கானாவில் 17, மிசோரமில் இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ., அதிக தொகுதிகளை அள்ளியது.

இந்நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள், தேசிய அளவில் அரசியல் களத்தை புரட்டி போடும் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் வெற்றிகளால், லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., மேலும் தெம்புடன் களமிறங்கும்.

மூன்று மாநிலங்களை இழந்தாலும், தெலுங்கானாவில் முதல் முறையாக, அபார சாதனையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இது அந்தக் கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த தேர்தல் முடிவுகள், 28 கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே வலுவாக உள்ள பா.ஜ.,வுக்கு தற்போது பலம் கூடியுள்ளது. அதனால், லோக்சபா தேர்தலில் கடும் போட்டி கொடுக்க, இண்டியா கூட்டணி வலுவானதாகவும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை, இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, இந்த இரண்டு கூட்டணியிலும் இல்லை. லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், பா.ஜ., வெற்றி பெறும் என கூறப்பட்டது. அதே நேரத்தில் சில கணிப்புகளில், இந்த இரு மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

அதிர்ச்சி தந்தது



அந்த கணிப்புகளை மீறி, நேற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து, இந்த இரு மாநிலங்களிலும், பா.ஜ., பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது.

காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடித்ததுடன், பெரும்பான்மையைவிட அதிக இடங்களை கைப்பற்றி, பா.ஜ., அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஓட்டு எண்ணிக்கையில் துவக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில், இரு கட்சிகளும் சமநிலையில் இருந்தன. மதியத்துக்குப் பின், முன்னிலை நிலவரத்தில்
பா.ஜ., அசுர வேகம் எடுத்தது.

கடந்த, 2014ல் உருவான தெலுங்கானாவில், தொடர்ந்து நடந்த இரண்டு தேர்தல்களிலும், சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி அபார வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் கண்வைத்து, தன் கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்பதை, பாரத் ராஷ்ட்ர சமிதி என, சந்திரசேகர ராவ் மாற்றினார். தேசிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

மாநிலத்தில் மற்ற கட்சிகள் எதுவுமே இல்லை என்ற பிம்பம் உருவாகியிருந்தது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அங்கு தீவிரமாக களமிறங்கின. சரியான திட்டமிடல், ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மற்ற மூன்று மாநிலங்களில் தோல்வியை அடைந்தாலும், தெலுங்கானாவில் அபார சாதனையுடன் காங்கிரஸ் வென்றுள்ளது. இதன் வாயிலாக கர்நாடகாவைத் தொடர்ந்து தென் மாநிலங்களில் இரண்டாவது மாநிலத்தில் காங்., ஆட்சி அமைய உள்ளது.



வாசகர் கருத்து (21 + 82)

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    அவர்கள் புள்ளி (I .N .D .I .A )வைத்தார்கள் .பிஜேபி கோலமே போட்டு விட்டது

  • வேங்கையன் - தமிழர் நாடு,இந்தியா

    வாக்குயந்திரம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது ...

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    ..ஆனால் தமிலர்கள் சாப்பாட்டுல அதை அதிகமா பயன்படுத்துவது இல்லன்னு தோணுது..கடலே இல்லாத ம.பி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் உப்பை அதிகம் போட்டு துண்ற இந்துக்கள் சாஸ்தி அதுனாலதான் நம்ப சேப்பாக்கம் சேகுவெராவின் சனாதனத்தை ஒழிப்பேன்

  • MATHIVAANANN SOUNDARARAJAN - Coimbatore,இந்தியா

    "புள்ளி" வைத்த இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக்கு ஐந்தில் நான்கு மாநிலங்களின் மக்கள், பழைய நெனைப்புடா பேராண்டி என்ற நீண்ட நெடுங்கனவில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பாடியுள்ள "பள்ளி" எழுச்சிப் பாடலாக காங்கிரஸ் பார்த்தால் மட்டுமே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெற்று எதிர் கட்சியாகவாவது வலம் வர முடியும் என்று உணர்ந்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும்..... மதிவாணன் சௌந்தரராஜன் கோவை.

  • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    பல விமானங்களை ரத்து செய்து , மோடியின் விமான வருகையை மட்டும் மக்கள் எதிர்பார்க்க செய்து ,சென்னையின் மீது நிலைகொண்டுள்ளார் வருண பகவான் . சில நேரங்களில் வாய்ப்புக்கள் இறைவனால் மட்டும் உருவாக்கப்படும் அதை பயன்படுத்தி கொள்பவர் புத்திசாலி

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ., ஆட்சி: தெலுங்கானா மட்டும் காங்.,க்கு சாதகம் (81)

  • Abi - Reno,யூ.எஸ்.ஏ

    வட இந்திய மக்கள் விழித்து கொண்டார்கள் உண்மையான வளர்ச்சியை பிஜெபி யால் மட்டும் கொண்டு வர முடியும் என்று. தமிழ் நாட்டில் ஓசி சாராயம், பிரியாணி சாப்பிடும் மானம் இல்லாத திராவிட அடிமைகள் திருந்த வேண்டும்.

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    தெலங்கானா ஓட்டு மெஷினை நல்லா செக் பண்ண வேண்டும்.. காங்கிரசு கைக்கூலி கொடுத்து ஏமாற்றி செய்த்து இருக்கும்..

  • அருண் குமார் - ,

    கான்கிராஸுக்கு சங்கு ஊதிட்டாங்க

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    பிஜெபி பி டீம் எதுன்னு இப்ப தெரியுதா? சனாதன ஒழிப்பு மாநாடு.. கிக்கிக்கி ... இது தெரியாத சிறுபான்மையினர் சிறு மதியினர் என்று அன்புடன் அழைக்கப்படுவர்.. 🤣🤣🤣

  • Jai -

    பொதுவாக ராகுல் காந்தி தான் அவருடைய பேச்சில் பிஜேபிக்கு சாதகமான பாயிண்டுகளை எடுத்துக் கொடுத்து விடுவார். தற்பொழுது அவருடைய வேலையை உதயநிதி செய்துள்ளார். சனாதனத்திற்கு எதிரான பேச்சு நிச்சயம் இந்த தேர்தலில் பிஜேபிக்கு பெரும் சாதகமாக முடிந்துள்ளது, இரண்டு சதவீத ஓட்டு வித்தியாசம் தான் ஆட்சியை தீர்மானிக்கிறது என்றால் இது போன்ற சனாதான எதிர்ப்பு பேச்சுக்கள் அந்த இரண்டு சதவீத வித்யாசத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். தமிழக மக்களும் பரம்பரையாக சின்னத்திற்கு ஓட்டு போட்டு இவர்களை வாழ வைத்தது போதும். அடுத்த முறை உங்கள் குடும்பத்தின் உங்கள் வாரிசுகளின் எதிர்காலத்திற்காக ஓட்டு போடுங்கள். நீட் தேர்வை வைத்து மீண்டும் ஒருமுறை வடை சுட மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

  • Thetamilan - CHennai,இந்தியா

    தேர்தல் ஆணைய துணையுடன் வோட்டுப்பெட்டியை மாற்றி விட்டார்கள் அல்லது செய்வினை செய்துவிட்டார்கள்

  • nv -

    விரைவில் ராமசாமி சிலை அகற்றப்பட்டு விடும்.. தமிழகத்தில் ஹிந்துக்கள் மனது வைக்க வேண்டும்

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சிறப்பாக கருத்தை பதிவு செய்துள்ளார் ....இந்துக்கள் எழுச்சி கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ...

  • venugopal s -

    வட இந்திய மக்கள் படிப்பறிவில்லாத, அரசியல் அறிவில்லாத முட்டாள்கள் என்று மறுபடியும் நிரூபித்து விட்டனர்!

    • முருகேசன்,சோளிங்கர் -

      வேணு நீ மூளை மழுங்கடிப் பட்ட ஒரு அறிவாலய உபி என்பதை அடிக்கடி நிரூபிக்கிறாய்..

    • hari -

      அப்போ I.N. D.. I. A மீட்டிங் போகாதே

    • ஆரூர் ரங் -

      தென்னிந்தியா அவசர நிலைக்கு ஆதரவாக இருந்த போது வடஇந்திய மக்கள்தான் அதனை எதிர்த்து காங்கிரசை முழுமையாக தோற்கடித்தனர். 😇முக்கியமாக அங்கு டாஸ்மாக் கிடையாது .

  • hari -

    ..... உதயநிதிகு நன்றிகள் நன்றிகள் பல

    • திகழ்ஓவியன் - AJAX ONTARIO

      MP யில் பீசப்பி கொடுத்த வாக்குறுதிகளுக்கு TN வரிப்பணம் தான் தேவை படும்

  • Siva - tirunelveli,இந்தியா

    நோட்டாவுக்கு கீழே என்றவன் எல்லாம் இப்போம் எங்கே கொண்டு முகத்தை வைக்க போறார் என்று தெரியவில்லை

  • sridhar - Chennai,இந்தியா

    மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிஜேபி வெற்றி பெற்றது , சனாதன விரோத கட்சி படு தோல்வி அடைந்தது .

  • Sivakumar Subbian -

    0 .......

  • Muthu Kumar - ,

    திமுக கூட்டணிக்கு இது முடிவுவை அளிக்கும்

  • Soumya - Trichy,இந்தியா

    அடேங்கப்பா விடியல் ஐயா டாட் இன்டியா கூட்டணியை வழிநடத்தி மாபெரும் வெற்றியை தந்துவிட்டார் ஹாஹாஹா விடியல் வாழ்க

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    இன்றைய தேர்தல் முடிவில் நான்கில் மூன்று பா .ஜ என்றால் புள்ளி வச்சி கூட்டணிக்கு ....

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    காங்கிரஸ் தலைவர் காங்கிரஸின் தோல்விக்கு காரணம், அதன் கூட்டணி கட்சியான திமுகவின் சனாதன எதிர்ப்பு போராட்டம் தான் உறுதியாக கூறினார். இம்மாதிரி கட்சிகளுடன் உறவு தேவையா என்றும்.வினவினார்.

    • Siva - tirunelveli,இந்தியா

      திமுக காங்கிரஸ் கூட்டணி இல்லை என்றால் காங்கிரஸ் படுதோல்வி அடையும்

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    நிருபர் உதயநிதியிடம்: சார் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? உதயநிதி: தேர்தல் எங்கு நடந்தது ? திமுக போட்டி இடவில்லை. அதனால் பிஜேபி ஜெயித்தது. தெலங்கானாவில் சனாதனம் மண்ணைக் கவ்வியது. தெலங்கானா பெரியார் மண் ஆகிவிட்டது. ராகுல் தான் இண்டி கூட்டணி பிரதமர். நாங்கள் அவரைத்தான் கை காட்டுவோம்.

  • SUBBU,MADURAI -

    ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் விரும்பவில்லை அதை நிராகரித்து விட்டார்கள் என்பதையே இந்த மூன்று மாநில பாஜகவின் தேர்தல் வெற்றிகள் உறுதி செய்கின்றன. இனி மேலாவது பாமக ராமதாஸ், நாம்தமிழர்கட்சி சீமான், மற்றும் இவர்களைப் போன்ற பிரிவினைவாத அரசியல் கட்சி தலைவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கிற பேச்சை எடுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.

    • Siva - tirunelveli

      இனி வாழ்நாளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கிற பேச்சை எடுக்க மாட்டார் ராகுல் காந்தி

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    இண்டியா கூட்டணிக்க்கு மக்கள் உணர்த்தி விட்டனர் ..

  • செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர் -

    முதலில் எல்லாம் இந்த திமுக காரனுங்க கண்டபடி கேவலமாக பேசி அசிங்கப் படுத்துவானுங்க ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் தமிழகத்திற்கு வந்த பின்பு இந்த திமுககாரனுங்க சனாதன ஒழிப்பு பேச்சுவரை அனைத்தையும் இந்தியில் மொழி பெயர்த்து அதை வட இந்திய நியூஸ் பேப்பர்களிலும், முக்கியமான வட இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பு பண்ண செய்தார் அதை பார்த்த இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் கொதித்து போயினர் பற்றாக்குறைக்கு மத்திய பாஜக தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி முதற்கொண்டு மற்ற அனைத்து மத்திய அமைச்சர்களும் இதை மிகச் சரியாக அங்குள்ள மக்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். அத்துடன் பிடித்தது சனி திமுகவிற்கும் அதன் புள்ளி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும். உதயநிதியின் அந்த சனாதனதர்ம ஒழிப்பு பேச்சுதான் இப்போது வட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை ஒழித்தே விட்டது இனிமேல் இவர்களின் I.N.D.I புள்ளிக் கூட்டணி நிலைக்குமா அல்லது அந்தக் கூட்டணியில் இருந்து திமுகவை கழட்டி விடுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும். எதுஎப்படியோ உதயநிதியின் மூலம் திமுகவிற்கு அழிவு காலம் ஆரம்பித்து விட்டது என்பதை நினைக்கும் போது மனதுக்குள் இனம்புரியாத சந்தோசம் குடி கொள்கிறது.

  • Soumya - Trichy,இந்தியா

    இருந்ததும் போச்சு

  • konanki - Chennai,இந்தியா

    எடப்பாடி டர்ர்ர்.....

  • raja - Cotonou,பெனின்

    திராவிடத்துக்கு கிலி பிடித்து விட்டதை ஒற்றுமை ஆகிவிட்டார்கள் என்பதை உறத்தும் தேர்தலாக முடிவுகள் அமைந்தவுடன்... கதரும் கதறல்கள் கருத்துக்கள் வாயிலாக தெரிகிறது...

  • nv -

    சனாதன ஒழிப்புக்கு சரியான செருப்படி கொடுத்த வட மாநில மக்கள்.. தமிழக ஹிந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.. திராவிடத்தை ஒழித்து விட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • Soumya - Trichy,இந்தியா

    இந்நேரம் குளிர் ஜுரம் வந்திருக்கும்

    • Siva - tirunelveli,இந்தியா

      அதனை பேரும் ஓடி விட்டான்.. இங்கே கருத்து எழுதுபவனையே காணவில்லையே

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    ரொம்ப ஆடாதீங்க ! ....கிளே!! இன்னும் ரிசல்ட் வர்ல!.முழு ரிசல்ட் வரட்டும்.

    • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai

      இன்னும் தென்னக மக்கள் திருந்தவில்லை, செத்துப்போன கான் காங்கிரஸ்க்கு கர்நாடக முட்டாள் இந்துக்கள் உயிர் கொடுத்தார்கள், இப்போது தெலுங்கானா மக்கள் இலவசத்திற்கு ஆசைப்பட்டு, இன்னும் கொஞ்சம் உயிர் கொடுத்து இருக்கிறார்கள். வெட்ட்ககேடு.

    • Siva - tirunelveli

      வந்தாச்சு வந்தாச்சு ....

  • raja - Cotonou,பெனின்

    தமிழகத்திலும் வரும் தேர்தல்களில் இந்துகளின் கோவில்களை இடித்து இந்துகளின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூட கூறமாட்டோம் என்று இந்துக்களை அவமான டுத்தும் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற கொள்ளை குடும்பத்தை அடித்துவிரட்ட தமிழ் இந்துக்கள் அண்ணாமலையார் தலைமையில் ஒன்றிணைந்து விட்டார்கள் என்பதை காட்டும் பாருங்கள்...

  • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

    I N D I A கூட்டணி யார் தலைமை வகிப்பது என்பதில் காங்கிரஸிற்கு உரிமை கோர தகுதி இழந்து விட்டது. ராஜஸ்தானில் இழப்பு மத்திய பிரதேசத்தில் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. காங்கிரஸ் தோல்வி iI N D I A கூட்டணிக்கு ஒரு சறுக்கல்.

  • வீரபத்திரன்,கருங்காலக்குடி -

    இத்தனை நாட்களாக ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட் வரட்டும் பிஜேபி மண்ணை கவ்வுவது உறுதி என்றும் பாஜகவை மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்றும் வீர வசனம் பேசி ஆனந்தக் கூத்தாடிய உபிஸ்களும், அங்கீஸ்களும், அமைதீஸ்களும், முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் பதுங்கி விட்டார்களா? அல்லது இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையா?எங்க போனாய்ங்கன்னே தெரியல! அநேகமா நாளைக்கு வேறு போலி பெயர்களில் வந்து மெல்ல தலைகாட்டுவார்கள் என நம்பலாம்.

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்தவாட்டி ஒரு பக்கியும் EVM குறித்து வாய் தெரக்கல? தொறந்தா மக்கள் வச்சி செஞ்சிருவாங்க.. பாஜக ஜெயிச்சா EVM கோளாறு.. விடியல் கும்பல் மற்றும் போலி மதச்சார்பின்மை கும்பல் ஜெயிச்சா மக்கள் தீர்ப்பு.. உங்கள் ஆட்டம் முடிவுக்கு வருகிறது.. இனிமேல் மைனாரிட்டி ஒட்டு வங்கி செயல்பட்டால் மெஜாரிட்டி ஒட்டு வங்கியும் ஆட்டத்திற்கு வரும். ஜெய் ஹிந்த்

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மோடிக்கு தண்டனை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என ஊளை சவுண்டுவிட்ட எரநூறு உப்பி கும்பல் யாரேனும் தெளிவான நிலையில் இருந்தால் மேடைக்கு வரவும்..

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    2024 ஜூன் மாதத்தில் மீண்டும்.KCR பதவிக்கு வருவார்.

  • Thetamilan - CHennai,இந்தியா

    உலகளாவிய கருப்பு பண முதலைகள் , இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் ஆதிக்கம் இனியும் முடிவுக்கு வரவில்லை. ஓட்டுப்பெட்டிகளையும் மாற்றி இருப்பார்கள் .

    • Indhiyan - Chennai,இந்தியா

      அப்போ தெலங்கானாவில் காங்கிரஸ் ஜெயித்தது ஓட்டுப்பெட்டிகளை மாற்றி தான், திருட்டு தனமாக ஜெயித்தார்களா?

  • Sundar -

    உதயநிதி effect...

  • Siva - Aruvankadu,இந்தியா

    மோடி ஜி ஆளுமை.

  • konanki - Chennai,இந்தியா

    சின்னவர் எங்க காணோம்

  • Rajah - Colombo - Thirumangalam,இலங்கை

    இந்த தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு தற்காலிக கொண்டாட்டம் அதிமுகவுக்கு நிரந்தர திண்டாட்டம். இதுதான் உண்மை.

  • Saai Sundharamurthy AVK -

    பாஜக வெற்றி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு இப்போது மக்கள் யாரும் டிவி செய்திகளை பார்க்கக் கூடாது என்பதற்காக பல இடங்களில் மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் எங்கும் கன மழையில்லை, புயல் இல்லை, பலமான காற்றும் இல்லை. 😊😊

  • sankar - Nellai,இந்தியா

    பிஜேபி ஆண்டவனோடு கூட்டணி - காங்கிரஸ் ஆண்டவன் எதிரிகளோடு கூட்டணி - அவ்ளோதான்

  • ஆரூர் ரங் -

    ராகுலை தோற்கடித்து பிஜெபி யின் நம்பர் ஒன் நட்சத்திர பேச்சாளராக ஆகிவிட்டார் உதை😉 இன்னும் பேசட்டும். வாழ்த்துக்கள்.

  • ஆரூர் ரங் -

    மூணு ஸ்டேட்லையும் மின்னணு வாக்கு இயந்திரம்தான் தப்பு பண்ணிடுச்சு.🤥🤔 தெலங்கானாவில் மட்டும் ஜனநாயகம் வென்றது.

  • Raja Vardhini - Coimbatore,இந்தியா

    நாளை இப்படி செய்தி வந்தாலும் வரும்... திமுகவுக்கு, குறிப்பாக உதயநிதிக்கு பா.ஜ.க. மனமார்ந்த நன்றி... .... சனாதனம் என்று பேசி, எங்களுக்கு வெற்றி கனியை பறித்து கொடுத்த திமுகவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்... மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் எங்கள் வெற்றிக்கு காரணமே திமுகதான் என்று பெருமிதம்.... அதே வேளையில் திமுக மீது காங்கிரஸ் கடும் கடுப்பில் உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் எளிதாக வெல்லும் நிலையில் இருந்த எங்களை படுகுழியில் தள்ளி விட்டது திமுக என்று மன வேதனையில் காங்கிரஸ் புலம்பல்...

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    சங்கி சங்கி என்று கிண்டல் பேசிய டீம்கா / காங்கிரஸ் சொங்கிகள் தலைகாட்ட முடியாத நிலைமை ஆகிப்போச்சு ......... பரவால்ல எங்க முன்னாடி வாங்க டீம்கா அல்லக்கைகளே ...... தப்பா நினைக்க மாட்டோம் .............

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    குடும்ப ஆட்சியின் தீமைகளை இன்னொரு திராவிடனான தெலுங்கன் புரிந்து வைத்துள்ளானோ ????

  • Abhivadaye - Salem,இந்தியா

    வாழ்க் உதயநிதி

  • sankar - Nellai,இந்தியா

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் வெற்றிகள் சின்னவருக்கே சமர்ப்பணம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    எல்லாம் கர்த்தவ்ய காலம் ....

  • Rajah - Colombo - Thirumangalam,இலங்கை

    இங்குள்ள டிவி விவாதங்களில் பிஜேபியை பற்றி என்னவெல்லாம் விவாதித்தார்கள் தெரியுமா? இப்போ யாரையும் காணவில்லை. அப்படி வந்தாலும் தெலுங்கானாவில் கிடைத்த வெற்றி பற்றி மட்டுமே பிதற்றுகின்றார்கள். உண்மையில் தெலுங்கானாவில் பிஜேபியின் வாக்கு வீதம் அதிகரித்திருக்கின்றது. இது தெரியாமல் புலம்புகின்றார்கள் .

  • இளந்திரயன், வேலந்தாவளம் -

    வெற்றி

  • Saai Sundharamurthy AVK -

    பாஜகவை பீடை கட்சி என்று ஏசினார்கள். இன்று உண்மையான பீடை கட்சி என்றால் யார் என்று தெரிந்து விட்டது....!!!☺️☺️

  • SUBBU,MADURAI -

    Bjps clean sweep in all three states. Massive loss of face for Congress.

  • vbs manian - hyderabad,இந்தியா

    தாமரை நன்றாகவே மலர்ந்துள்ளது. நாட்டுக்கு நல்ல காலம்.

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    சனாதனமும் இந்துக்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது. மாநில சட்டமன்றத்திற்கே இவ்வளவு ஆதரவு என்றால் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா என்கிற கூட்டணியே அதற்கு முன்னரே உடைந்து சிதறி காணாமல் போய்விடும் போலவே தெரிகின்றது. இந்த தொலைக்காட்சி நேரலையில் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களின் கதறலை காணாமல் போனதில் வருத்தமே. அந்த தொலைக்காட்சி எப்படியும் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் ஜெயிக்கும் என்று கனவு கண்டு செட்டப் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் முடிவுகளோ வேறு மாதிரி ஆனதும் நிகழ்ச்சியையே மாற்றிவிட்டு துண்டைக்காணோம் துணியை காணோம்ன்னு ஓடிட்டாங்க. ஸ்டாலினின் ஆசைக்கு பலத்த சேதாரம் ஆயிற்று. இந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த இதே வெற்றியை தமிழகத்திலும் நிச்சயம் காணலாம்.மோடிஜிக்கு மா மாபெரும் வெற்றி. உலக அரங்கில் புகழ் கொண்ட மோடிக்கு இந்திய மக்களின் மகத்தான ஆதரவின் முதற்படி இவ்வளவு வெற்றியும்.

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    இதற்கு முக்கிய காரணம் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு ஒன்றுதான். அந்த விடியோவை இந்தியில் மொழி பெயர்த்து வட இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    தி மு க இனி காங்கிரசுக்கு 5 சீட்டுக்கு மேல் எதிர்பார்க்கவேண்டாம் என சொல்லும்

  • mindum vasantham - madurai,இந்தியா

    People should ask question where is Senthil Balaji

  • theruvasagan -

    தெலுங்கானாவில் கான்கிராஸ் ஜெயித்தாலும் தலை பதவிக்கு குடுமிப்புடி சண்டை நிச்சயம்.

  • sankar - Nellai,இந்தியா

    தெலுங்கானாவில் மீண்டும் ராவ் அவர்களே வெல்வார் - இறுதி ரிசல்ட் பாருங்கள் - காங்கிரஸ் வெல்லும் ஆனால் எல்லைக் கோட்டின் அருகே இருக்கும் - ராவ் கூட்டணி ஆட்சி அமைப்பார் - மற்ற கட்சிகளுடன் சேர்ந்து

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    குடும்ப ஆட்சி செய்வோர்கள் கழகம் நோட்டாவிற்கும் கீழே என்று எழுதி சமாதானப்படுத்தி கொள்கிறேன்

  • GoK - kovai,இந்தியா

    சுடாலினும் அவர் மவனும் தங்கச்சியும் மாமன் மவனும் எங்கேயப்போ?

  • Bhakt - Chennai,இந்தியா

    அடுத்து தீயமுக வுக்கு ....

    • Barakat Ali - Medan,இந்தோனேசியா

      அடித்த கொள்ளைக்கு தண்டனை இல்லாத பட்சத்தில், மக்கள் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

  • Seshan Thirumaliruncholai - chennai,இந்தியா

    பி ஜெ பி விந்திய மலைக்கு வடக்கே வெற்றி பெற்றது மதவாத அடிப்படையில் அல்ல என்று நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் தெற்கே நிலைமை மாறுபட்டது. இதன் விளைவு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு தென் பகுதி பி ஜெ பி கடின உழைப்பை காட்டவேண்டும். நிச்சியம் திராவிட கட்சிகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

  • அருண் குமார் - ,

    வட மாநிலத்தவர்க்கு தெரியுது யார் கையில் ஆட்சி இருந்தால் நல்லதுன்னு

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    பாஸ் இது early ட்ரெண்ட், மாற வாய்ப்பு அதிகம், கர்நாடகா ல இப்படி தான் சொன்னீங்க, கடைசில காங்கிரஸ் அள்ளிட்டு போயிடுச்சி, எல்லோரும் sunday mass prayer ல காங்கிரஸ் ஜெயிக்க வேண்டி கூட்டு ஜெபம் . MP RAJ ல பிஜேபி ஜெயிச்சா மருமவன் அடுத்த target ஆம், கனி ராஜா உதய் பொன்னு வேலு துரை எல்லோரும் anticipatory பெயில் apply பண்ணுவாங்கலம் 😭😭😭

    • G. P. Rajagopalan Raju - ,

      உன் முகத்தில் கருப்பு துண்டு நன்றாக தெரிகிறது 🤣🤣

  • kulandai kannan -

    தற்காலிக இலவசங்களை விட, நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் தான் முக்கியம் எனக் கருதும் வடக்கன் வடக்கன்தான்.

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU

      அவனுங்களை நம்மாளுங்க பேசாத பேச்சு இல்லை ..... செய்யாத கிண்டலில்லை ......

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    KCR தோல்வி. காங்கிரஸ் வெற்றி. இதனால் ஒரு பெரிய மாற்றம் ஏட்படப்போவதில்லை. முன்னவர் விட்டதை, இப்பொழுது வருபவர் அள்ளிவிடுவார். அவ்வளவுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement