Load Image
Advertisement

புதிய தொழில்நுட்பம்! திடக்கழிவு உருவாகாமல் சாயக்கழிவு சுத்திகரிப்பு

 New technology! Treatment of dye waste without generation of solid waste    புதிய தொழில்நுட்பம்! திடக்கழிவு உருவாகாமல் சாயக்கழிவு சுத்திகரிப்பு
ADVERTISEMENT
திருப்பூர்:சாயக்கழிவு சுத்திகரிப்பின் போது, திடக்கழிவு உருவாகாத வகையில், 'ஜீரோ சதவீத ரசாயன' தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, திருப்பூரில் சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.

திருப்பூர் சாய ஆலைகளில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அமலான பிறகு, இயக்கச் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. சாயக்கழிவை, இரண்டு நாட்கள் தேக்கி வைத்து, பிறகு உயிரியல் முறையில், வண்ணத்தை நீக்குதல்; 'குளோரினேசன்' முறையில், பாக்டீரியா, பூஞ்சைகள் நீக்கம் செய்யப்படுகின்றன.

அடுத்ததாக, ஆர்.ஓ., பிளான்ட் மூலம், சுத்தமான தண்ணீராக பிரித்து, மறுசுழற்சி பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படுகிறது. இதில், நேரம் மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில், ''ஜீரோ சதவீத ரசாயனம்' என்ற தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

குன்னாங்கல்பாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், ஆறு மாதங்களுக்கு சோதனை முறையில் பயன்படுத்தவும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா மற்றும் ஜெர்மனி தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

'இந்தோ - ஜெர்மன்' அறிவியல் தொழில்நுட்ப மைய உதவியுடன், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், ஜெர்மனியில் உள்ள கோதே பல்கலைக்கழகம் சார்பில், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகம், 'இப்கான்' தொழிற்சாலைகள் இணைந்து, இத்தொழில்நுட்பத்திற்கான சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.

'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் இருந்தாலும், திரவக்கழிவு வெளியேறுவதில்லை. உயிரியல் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேசன் மூலம், 'கலப்பு உப்பு' மற்றும் திடக்கழிவு உருவாகிறது. அவற்றை அகற்றுவதும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பதாக 'ஜீரோசதவீத ரசாயன' தொழில்நுட்பம் அமையும்.

தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியதாவது:

திருப்பூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களில், உயிரியல் மற்றும் குளோரினேசன் சுத்திகரிப்புக்கு பிறகு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. புதிய' ஜீரோ சதவீத ரசாயன' தொழில்நுட்பத்தில், நேரடியாக சாயக்கழிவை, சுத்திகரிப்பு செய்து, திரவம் மற்றும் திடக்கழிவு இல்லாமல், சுத்தமான தண்ணீரை பிரித்து எடுக்க முடியும்.

புதிய தொழில்நுட்பத்தால், பெரிய அளவிலான கழிவுநீர் தேக்க தொட்டி தேவையில்லை. பெரிய இடமும் அவசியமில்லை. கழிவுநீரை தேக்கி வைக்காமல், உடனுக்குடன் சுத்திகரிக்கலாம். சோதனை முறையில், ஆறு மாதம் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் சாத்தியமானால், சாய ஆலைகளின் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement