Load Image
Advertisement

பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி: கட்சி தலைவர்கள் பெருமிதம்

Party leaders are proud of PM Modis leadership   பிரதமர் மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி: கட்சி தலைவர்கள் பெருமிதம்
ADVERTISEMENT
சென்னை:'மூன்று மாநிலங்களில், பா.ஜ., வெற்றி பெற்றது, பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி; வரும், 2024ல் மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பார்' என, அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம்: உங்கள் தலைமையின் கீழ் கிடைத்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.உங்களின் வளர்ச்சி திட்டம் மற்றும் தொலை நோக்கு பார்வை உடைய ஆட்சிக்கு, மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.இது, நம் நாட்டை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி, தாங்கள் அழைத்துச் செல்கிறீர்கள் என்பதையும்,பொதுமக்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

ஊக்கமடைகின்றேன்இந்த முக்கியமான சாதனையை நாங்கள் கொண்டாடும் போது, உங்கள் பார்வைக்கு ஏற்ப, என் முயற்சிகளை மேலும் அர்ப்பணிக்க நான் ஊக்கமடைகிறேன். உங்கள் வழிகாட்டுதலின் கீழ், நம் மக்களின் வாழ்வை வளப்படுத்த, அனைத்து நலன் புரியும் நடவடிக்கைகளும் திறம்படசெயல்படுத்துவதை உறுதி செய்ய, தொடர்ந்து விடா முயற்சியுடன் செயல்படுவோம்.

உங்களின் முன்னோக்கிய பயணம் தொடர்ந்து வெற்றியடையட்டும். தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.


தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:


நடந்து முடிந்த நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள மக்களின்,
மனநிலையையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன.நாட்டின் வளர்ச்சி அரசியலை, பிரதமர் மோடியால் தர முடியும் என்ற முடிவில் உள்ளதை பிரதிபலிக்கிறது.'இண்டியா' கூட்டணியின் பிரிவினைவாத அரசியலை, பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ம.பி.,யில், 18 ஆண்டு கால நல்லாட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நிராகரிப்புராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சிகளின்
நடவடிக்கைகள்; டில்லி காங்கிரஸ் தலைமையை மையமாக கொண்ட அரசியலுக்காக
நிராகரித்துள்ளனர்.கடந்த, 2018ல், வெறும், 6.9 சதவீத ஓட்டு வங்கி வைத்திருந்த பா.ஜ., இன்று, 13.87 சதவீத ஓட்டுவங்கியாக இரட்டிப்பாக்கி உள்ளது.வரும், 2024 லோக்சபா தேர்தலில், மூன்றாவது முறையாக, பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமையும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி:


தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 'இண்டியா' கூட்டணியில் முக்கியமான கட்சியாக இருப்பது காங்கிரஸ். தென் மாநிலங்களில், பா.ஜ.,வை நுழையவிடாமல் இண்டியா கூட்டணி அரணாக இருக்கிறது.பிற மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், ஓட்டு சதவீதம் என்பது மிகக்குறைந்த வித்தியாசம் தான். அதுவும் பெரும் பணபலத்தால் சாதித்துள்ளது.

லோக்சபா தேர்தலில், இந்த அளவுக்கு பா.ஜ., வெற்றி பெற முடியாது. வட மாநிலங்களிலும், பா.ஜ., நுழைய விடாத நிலையை, மக்கள் உருவாக்குவர். வரும் லோக்சபா தேர்தலில்,
இண்டியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

வரலாற்று சாதனைமத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் அறிக்கை:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மூன்று மாநிலங்களில் வெற்றிக்கொடி பறக்கிறது.
ராஜஸ்தானில், பா.ஜ., பெற்றது இமாலய வெற்றி. தொடர்ந்து, ஐந்தாவது முறையாக, ம.பி.,யில் பா.ஜ., ஆட்சியை பிடித்து,வரலாற்று சாதனை படைத்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில், பிரதமர் மோடி மீது பழங்குடியின மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
உழைப்பு ஒன்றை மூலதனமாக கொண்டிருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கு உறுதுணையாக
இருக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டாவுக்கு நன்றி.வரும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.

கமலாலயத்தில் கொண்டாட்டம்ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வெற்றியை, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.


தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி
ஆகியோருக்கு நிர்வாகிகள் லட்டு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தனர். 'பிரதமர் மோடி வாழ்க; வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க' என்ற கோஷங்களை எழுப்பினர்.


கமலாலயத்தில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி அளித்த பேட்டி: பிரதமர் மோடி தலைமையிலான, 10 ஆண்டு நல்லாட்சிக்கும், சாதனைகளுக்கும் தான் சட்டசபை
தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மக்கள் அனைவரும், பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு
ஆக்கமும், ஊக்கமும் தருகிறது.

நாட்டில் உள்ள, 125 தனித் தொகுதிகளை சேர்ந்த பட்டியலின மக்கள், வரும் லோக்சபா
தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிப்பர்.மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பா.ஜ.,வுக்கு கிடைக்கும். தெலுங்கானா மாநிலத்தில் எங்களுக்கு தோல்வி இல்லை. பா.ஜ.,வின் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; வளர்ச்சி பாதையில் தான் சென்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (3)

  • Prasanna Krishnan R -

    சலாம் மோதிஜி

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பிரதமர் மோடிஜியை கேலி செய்து, அவரை இகழ்ந்து பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கும், பாஜகவுக்கும் வளர படிக்காட்டுக்களாக இருக்கின்றன. மக்கள் உண்மை எது, பொய் எது என்பதை உணர்ந்துவிட்டார்கள். மக்கள் நாயகனே உலக நாயகனே மோடிஜி.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி. அதில் சந்தேகமே இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்