Load Image
Advertisement

கரைக்கு இணையாக புயல் நகர்வு: வானிலை ஆய்வு மையம்

Storm Movement Along the Shore: Met Office   கரைக்கு இணையாக புயல் நகர்வு: வானிலை ஆய்வு மையம்
ADVERTISEMENT
சென்னை கரைக்கு இணையாக புயல் நகர்ந்து வருவதால் நாளை இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக்ஜாம் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது:


வட தமிழகம் தெற்கு ஆந்திராவில் நாளை நிலை கொள்கிறது புயல்.வங்க கடலில் 8 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் நகர்ந்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் காஞ்சிபுரம் காட்டுப்பாக்கத்தில் 10 செ.மீ.,சென்னை வளசரவாக்கம் 8 செ.மீ.,, கோடம்பாக்கம் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இருந்து 210 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 240 கி.மீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் உள்ளது.

மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வந்த புயல் வேகம் 8 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 8 மணி நேரமாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். கரைக்கு இணையாக புயல் நகர்ந்து வருவதால் நாளை இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்