Load Image
Advertisement

ஒரு சதவீதத்திற்கும் குறைவாக பதிவான நோட்டா ஓட்டுக்கள்

 Nota votes registered less than one percent   ஒரு சதவீதத்திற்கும் குறைவாக பதிவான நோட்டா ஓட்டுக்கள்
ADVERTISEMENT
புதுடில்லி: நடந்து முடிந்த தேர்தலில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் நான்கு மாநிலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நோட்டா ஒட்டுகள் பதிவாகி உள்ளது.

கடந்த நவம்பரில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று டிச.,3-ம் தேதி நடைபெற்றது.மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (4ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் நான்கு மாநிலங்களிலும் நேட்டா பதிவு பெற்ற வாக்கு எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளதாவது: ம.பி.,யில் மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 77.15 சதவீதம். இதில் 0.99 சதவீதம் வாக்காளர்களே நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.

சட்டீஸ்கரில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 75.03 சதவீதம். இதில் 1.29 சதவீத வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி உள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 71.14 சதவீதம். இம் மாநிலத்தில் 0.74 சதவீதம் பேர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.

இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவான மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 74.62 சதவீதம். இதில் 0.96 சதவீதம் பேர் நோட்டாவை பயன்படுத்தி உள்ளனர்.

கடந்த 2013 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் கடைசி விருப்பமாக நோட்டா பட்டனை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இனி நோட்டாவுக்கு கீழே ஓட்டுக்கள் வாங்கப்போவது இந்த தீய திராவிடியா கட்சிகள்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்