Load Image
Advertisement

இன்றைய வெற்றி வரலாறு காணாதது;2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி : பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை

 Todays success is unprecedented. : Prime Minister at BJP, Head Office  இன்றைய வெற்றி வரலாறு காணாதது;2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி : பா.ஜ., தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை
ADVERTISEMENT
புதுடில்லி: இன்றைய வெற்றி வரலாறு காணாதது, 2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி என பிரதமர் மோடி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் கூறினார்.

மூன்று மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து புதுடில்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பிரமர் மோடி , தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

கடந்த நவம்பரில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று டிச.,3-ம் தேதி நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் , ம.பி.,சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது.

இதனையடுத்து புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில்வெற்றி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி..நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேசிய நட்டா கூறுகையில்:வரும் 2024-ல் நடைபெறஉள்ள பொது தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் வெற்றி பெறுவோம். ஓ.பிசி., பிரிவினர் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான வெற்றி, இண்டியா கூட்டணியின் ஜாதி வெறி மற்றும் சமாதான அரசியல், நாட்டை பிளவு படுத்தும் அரசியலை கட்டுப்படுத்தி உள்ளது. என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி இன்றைய வெற்றி வரலாறு காணாதது. தெலங்கானாவில் பா.ஜ., அடித்தளத்தை அமைத்துள்ளது. இந்த தேர்தலில் ஜாதி ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடந்தன.பெண்கள் , இளைஞர்கள், ஏழை மக்கள் விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று ஒவ்வொரு ஏழையும் தானே வெற்றி பெற்றதாக சொல்கின்றனர். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவரும் தேர்தலில் வெற்றி பெற்றதாக எண்ணுகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார். பழங்குடியின சகோதர, சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பழங்குடியினர் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளனர்.இந்தியா முன்னேறும்போது மாநிலங்களும் முன்னேறும். ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்க்கை மேம்படும் என்பதை இந்திய வாக்காளர்கள் அறிந்துள்ளனர். அதனால் வாக்காளர்கள் பா.ஜ.,வை தொடர்ந்து தேர்வு செய்து வருகின்றனர்.


காங்கிரஸ் கட்சியினரும் அதன் கூட்டணியினரும் தேசவிரோத கட்சிகளையும் நாட்டை பலவீனப்படுத்தும் எண்ண அரசியலையும் நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (9)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  2026 தேர்தலின் நானூறுக்கும் அதிக சீட்டுக்கள் பாஜகவுக்கு கிடைக்கும். மக்கள் அவர் பக்கம். நன்றாக பணம் கொடுங்கள். மக்கள் வாங்கிக்கொண்டு பாஜகவுக்கு வோட்டு போடுவார்கள்.

 • அருண் குமார் - ,

  ஜெய் மோடிஜி அடுத்த 10 வருடம் யாரும் அசக்க முடியாது

 • saravanan - chennai,இந்தியா

  அடுத்து வரவிருக்கின்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலும் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசே மீண்டும் அரியணையில் அமரும் அவரின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் விருப்பம். சிறப்பான ஆட்சி என்பது லஞ்சம், ஊழல் இல்லாத அரசாகவும் அணைவரும் தத்தம் திறமைக்கேற்ப பொருளாதார வளர்ச்சியின் பயனை பெற வழிவகை செய்யும் அரசாகவும், உலக நாடுகள் மத்தியில் நம் வலிமையை உணர்த்தும் வகையிலும் இருக்க வேண்டும் அதை மோடி சிறப்பாக செயல்படுத்துகிறார்.

 • Muthu Kumar - ,

  ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே மோடிஜி வாழ்க

 • Thetamilan - CHennai,இந்தியா

  மோடி இப்படி கூறியது அரசியல் சட்டத்திற்கு எதிரானது . இப்போது நடந்தது ஒரு சில மாநில தேர்தல். பாராளுமன்றத்திற்கு பின்னர் தனியாக ஒரு தேர்தல் அந்த மாநிலங்களிலும் சேர்த்து நடத்தப்படும் . மோடி தன இஸ்த்திற்கு எது வேண்டுமானாலும் பேசமுடியாது

  • hari - ,

   ok தேடமிழன்.... எதுக்கும் ஜெலுசில் வாங்கி வச்சுக்கோ

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்