Load Image
Advertisement

‛‛இதுவே தொடர்ந்தால் இண்டியா கூட்டணியை காப்பாற்ற முடியாது: உமர் அப்துல்லா புலம்பல்

"If situation is like this in future, we cannot win": Omar Abdullah on INDIA bloc after assembly election results ‛‛இதுவே தொடர்ந்தால் இண்டியா கூட்டணியை காப்பாற்ற முடியாது: உமர் அப்துல்லா புலம்பல்
ADVERTISEMENT
உதம்பூர்: ‛இண்டியா கூட்டணியின் நிலைமை இனிவரும் காலங்களிலும் தொடருமானால், எதிர்க்கட்சிகளை காப்பாற்ற முடியாது; நாம் வெற்றி பெற முடியாது' என தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து இண்டியா கூட்டணியில் இடம்பெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது: ஒன்றும் சொல்வதற்கில்லை. மாநில தேர்தல்களில் இண்டியா கூட்டணியின் நிலைமை இனிவரும் காலங்களிலும் தொடருமானால், நம்மை (எதிர்க்கட்சிகளை) காப்பாற்ற முடியாது; நாம் வெற்றி பெற முடியாது.

மத்திய பிரதேசத்தின் களநிலவரத்தை காங்கிரஸ் கட்சியால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அங்கு அகிலேஷ் யாதவ் கட்சிக்கு 5 முதல் 7 இடங்களை வழங்கியிருந்தால் தோற்றிருக்க மாட்டார்கள் என கூறுகின்றனர். எப்படியிருந்தாலும் இப்போது தோற்றுவிட்டனர். அகிலேஷ் கட்சிக்கு சீட் கொடுத்திருந்தால், ஒன்றிரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்கும் அவ்வளவுதான்.

பா.ஜ.,வின் வெற்றியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்காக பா.ஜ.,வை வாழ்த்தலாம். சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என்ற தகவல்கள் வந்தன. ராஜஸ்தானிலும் கடைசியில் முன்னிலை வகிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் வந்ததும், அவை அனைத்தும் பொய்யாகிப்போனது. ம.பி.,யில் 5வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. இது சாதாரணமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (15)

  • S.Govindarajan. - chennai ,இந்தியா

    தமிழ்நாட்டில திமுக. தோற்கடிக்கப்படவேண்டும்

  • பேசும் தமிழன் -

    இன்னும் இருக்கிறது... புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்களை... மக்கள் நம்ப தயாராக இல்லை காலை என்பதையே இது காட்டுகிறது. ஊழல் பேர்வழிகள் எல்லாம்... தங்கள் சுயநலத்திற்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.... அவர்களின் ஒரே நோக்கம்... நாட்டை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பது தான் !!!!

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த தொடக்கமே, எதிர்க்கட்சியினரை தொடை நடுங்கவைத்துவிட்டது. இனி இல்லை அந்த புள்ளிவைத்த I.N.D.I.A. கூட்டணி.

  • அருண் பிரகாஷ் மதுரை -

    மொத்தம் உள்ள 543 எம்பிக்களில், 2014 தேர்தலில் 55 எம்பிக்கள், 2019 தேர்தலில் 50 எம்பிக்கள் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை நீங்கள் அனைவரும் சேர்ந்து அதை விடக் குறைவான தொகுதியில் வெற்றி பெற வைக்க முடிவு எடுத்து விட்டீர்கள் என்று தெரிகிறது...கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்து கூடப் பெற முடியாத கட்சியை அடுத்து எவ்வாறு கூடிக் கெடுக்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்து விடுங்கள்...இன்னுமொரு முக்கியமான விஷயம் உங்களால் காங்கிரஸிற்கு உபயோகமா இல்லை காங்கிரசால் உங்களுக்கு உபயோகமா என்பது உங்களுக்கும் காங்கிரஸிற்கும் எப்பொழுது புரியப் போகிறது என்று புரியவில்லை... கள நிலவரம் இப்பொழுது புரிந்து என்ன செய்ய..ஹிந்துக்கள் விழிப்புணர்வு வடக்கே வந்து விட்டது..கொஞ்ச காலத்தில் தெற்கே கண்டிப்பாக வரும்...

  • Raja - chennai,இந்தியா

    உதயநிதி கட்சி கூட்டணியில் இருக்கும் வரை விடிவே இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்