Load Image
Advertisement

கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும்: ராகுல்

The principled struggle will continue: Rahul   கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும்: ராகுல்
ADVERTISEMENT
புதுடில்லி: 3 மாநில தேர்தல் தோல்விகளை ஏற்பதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், அங்கு கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும் எனக்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். கொள்கை ரீதியிலான போராட்டம் தொடரும்.

தெலுங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். கடினமாக உழைத்து ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; தெலுங்கானா மக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தானில் எங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த 3 மாநிலங்களிலும் எங்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், இந்த மூன்று மாநிலங்களிலும் கட்சியை மீண்டும் கட்டி எழுப்பவும், புத்துயிர் பெற செய்யவும் உறுதியாக உள்ளோம். தற்காலிகமாக ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டு வந்து, ‛இண்டியா' கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வோம் எனக்கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (30)

  • ராஜா -

    என்ன கொள்கை!? நாட்டில் பிரிவினைவாதத்தை, பிரிவினைவாதிகளை ஆதரித்து வெளிநாட்டினர் முன் மண்டியிட செய்வது தான் என்றுமே காங்கிரசின் கொள்கை.

  • ராமகிருஷ்ணன் -

    ராகுல் தேர்தல் ராசி இல்லாதவர் என்று கார்க்கே யை தலைவராக கொண்டு வந்தால் அவரைவிட மோசமான ரிசல்ட் வருது, தெலுங்கானா மட்டும் மூக்காண்டி ராசியால் காங்கிரஸ் வந்துள்ளது.

  • பேசும் தமிழன் -

    பப்பு.... நீ வேண்டுமானால்... உன் அபிமான பாகிஸ்தான் அல்லது இத்தாலி நாட்டில் முயற்சி செய்யலாம்... இந்திய நாட்டு மக்கள்... போலி காந்தி கும்பலை நம்ப மாட்டார்கள் !!! உன் பெயரே போலியாக இருக்கும் போது.... நீ எப்படி உண்மையானவனாக இருக்க முடியும் ???

  • venugopal s -

    காங்கிரஸ் கட்சியினர் மனம் தளர வேண்டாம்.காங்கிரஸ் தோல்வி அடைந்த மாநிலங்களில் கூட பாஜகவுக்கு கடுமையான போட்டி கொடுத்தே தோல்வி அடைந்துள்ளது.அதனால் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இன்னும் சற்று கடுமையாக உழைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்!

    • பேசும் தமிழன் -

      இந்தியாவில் வாய்ப்பில்லை... வேண்டுமானால் உங்கள் அபிமான பாகிஸ்தான்... சீனா...அல்லது இத்தாலியில் முயற்சி செய்யலாம் !!!

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    காங்கிரஸ் பல மாநிலங்களில் தோற்றதற்கு காரணமான அந்த உதவா நிதி, கையில் ஒரு அழுகிய முட்டையுடன் இப்பொழுது ஒரு அறிக்கை விடுவார் பாருங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்