Load Image
Advertisement

‛‛ மக்கள் நலனுக்காக அயராது உழைப்போம்: பிரதமர் உறுதி

"Indians Firmly With Politics Of Good Governance": PM Modi On BJP's Big Win  ‛‛ மக்கள் நலனுக்காக அயராது உழைப்போம்: பிரதமர் உறுதி
ADVERTISEMENT
புதுடில்லி: 3 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அமைத்ததற்கு நன்றி தெரிவித்தள்ள பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காக அயராது உழைப்போம் எனக்கூறியுள்ளார்.

சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர், ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கான அரசியலில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. மிகப்பெரிய ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவோம் என உறுதி அளிக்கிறேன். கடுமையாக உழைத்த பா.ஜ., தொண்டர்களுக்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அயராது பாடுபட்டதுடன், நமது வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கானா தேர்தல்



மற்றொரு அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்த தெலுங்கானா சகோதரர், சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் காலத்திலும் அதிகரிக்கும். தெலுங்கானா உடனான நமது தொடர்பு பிரிக்க முடியாதது. தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்போம். பா.ஜ.,வுக்காக உழைத்த ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (7)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அயராது உழைக்கவும் வேண்டும். அதேபோல, உதயநிதி போன்றவர்களை 'லூசுத்தனமாக' பேசவும் விடவேண்டும். இன்று பல மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதற்கும், காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கும் முக்கிய காரணம் அந்த உதவா நிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுத்தான்.

  • Thetamilan - CHennai,இந்தியா

    அம்பானி அதானி டாடா சிவநாடார் குடும்ப மக்களின் நலனுக்காக

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    சாரி.... அதானி குழும நலனுக்காக என்பது அச்சுப்பிழையாகி விட்டதோ?

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    சபாஷ்

  • Ram - ottawa,கனடா

    Mass MODI Waste Udayanithi

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்