Load Image
Advertisement

சத்தீஸ்கரில் காங்.,கிற்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ.,: வெற்றி கிடைத்தது எப்படி?

Chhattisgarh Shock For Congress, BJP Races To Convincing Win சத்தீஸ்கரில் காங்.,கிற்கு அதிர்ச்சி கொடுத்த பா.ஜ.,: வெற்றி கிடைத்தது எப்படி?
ADVERTISEMENT

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்., ஆட்சியை தக்க வைக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதனையே கூறின. ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து பா.ஜ., முன்னாள் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.


90 சட்டசபை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவ.,7 மற்றும் 17ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 76.31 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம் என காங்கிரஸ் கட்சி உறுதிபடக் கூறியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவித்தன.
இதற்கு ஏற்றார் போல், இன்று ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது. ஆனால் போகப் போக நிலைமை மாறியது. காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்தது. தொடர்ந்து பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. மாலை 4:30 மணி நிலவரப்படி பா.ஜ, - 55 இடங்களிலும், காங்கிரஸ் -34 இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்று உள்ளது. இதனால், சத்தீஸ்கரில் பா.ஜ., ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

இந்த வெற்றி தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் முடிவு இப்படிதான் இருக்கும் என நாங்கள் அறிவோம். ஆனால், மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. பூபேஷ் பாகெலை மக்கள் நிராகரித்து விட்டனர், பூபேஷ் பாகெலின் ஊழல், மதுபான முறைகேடு, மகாதேவ் சூதாட்ட மோசடி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் எதனையும் கேட்கவில்லை. கட்சி மேலிடம் அளிக்கும் எந்த பணியையும் முழு அர்ப்பணிப்போடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (7)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  மக்கள் இப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சியை பற்றி முழுமையாக புரிந்துகொண்டுள்ளார்கள். இந்த நிலை கூடிய சீக்கிரம் தமிழகத்திலும்.

 • venugopal s -

  இந்தியா முழுவதும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆளுங்கட்சியின் மீது வெறுப்படைந்து எதிர்க்கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைக்கின்றனர், அவ்வளவு தான் விஷயம்!

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai

   எங்கட இன்னும் ஒரு கொத்தடிமை கூட கதறலை ஆரம்பிக்கவில்லையே என்று பார்த்தேன் இதோ வேணுகோபால் ஆரம்பித்து வைத்து விட்டார். கர்நாடகாவில் பி ஜே பி தோற்றபோது, தாங்கள் வேறுமாதிரி கருது எழுதினீர்கள்? மறந்து விட்டதா?

  • Indhiyan - Chennai

   அப்போ அடுத்த தமிழக தேர்தலில் திமுக இறங்கிவிடும் என்பது உறுதி. அவ்வளவு தான் விஷயம்

  • venkat - chennai

   மத்தியபிரதேசத்திலுமா?

 • ஆரூர் ரங் -

  பாஜக தோல்வியை தழுவும் என்று நினைத்து மனமொடிந்திருந்த நேரத்தில் பூபேஷ் பாகலின் தந்தை எல்லை தாண்டி பிராமணர்களையும் ஹிந்து மதத்தையும் மட்டம் தட்டிப் பேசினார்😬 . அந்த சூடு அடங்குவதற்குள் சின்னதத்தி சனாதன எதிர்ப்புப் பேச்சை உளறி வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சினார். அருகிலுள்ள மத்திய பிரதேசத்திலும் அதன் பலன் எதிரொலித்தது. எத்தனையோ கோடி செலவழித்து பிரச்சாரம் செய்தாலும் அவற்றையும் மீறி செலவே இல்லாமல் சின்னதத்தி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்து விட்டார்.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  பிஜேபி யில் யாரு முதல்வர் என தலைமை சொல்கிறதோ அதை முழு மனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்... அதுவும் மோடி மற்றும் அமித் ஷா மேல் உள்ள மரியாதை அல்லது பயம் என்று கூட இருக்கலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்