Load Image
Advertisement

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

Assembly election results: Leaders comment   4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து
ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: இது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலுக்கான வெற்றி. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜ., ஆட்சி அமைக்கிறது என்றார்.


மக்கள் விருப்பம்





மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: பா.ஜ., வின் இரட்டை இன்ஜின்
ஆட்சி தான் மக்கள் விருப்பம். ராஜஸ்தானில் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டி விட்டனர் என்றார்.

தெலுங்கானா பாஜ., மூத்த தலைவர் சுபாஷ் கூறியதாவது: தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி முகம். மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பா.ஜ., ஏற்கும். வெற்றி பெறப்போகும் எம்.எல்.ஏ.,க்கள் மீது காங்கிரஸ் தலைமைக்கு நம்பிக்கை இல்லை.

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி விடும் என காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால் பல பஸ்களை தயாராக வைத்திருக்கிறார்கள் என்றார்.


மிகப்பெரிய வெற்றி




மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மத்தியபிரதேசத்தில் பாஜ.,வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. பாஜ., அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளது. பாஜ., அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது: ம.பி.,யில் பாஜ., மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. இது முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கான வெற்றி. காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்திற்காக லட்டு தயாரித்தனர்.

போஸ்டர் தயார் செய்தனர். நாங்கள் அமைதியான தேர்தல் பணி ஆற்றினோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக 4 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. பிரதமர் மோடி வளர்ச்சி அரசியலை ஏற்றுக்கொண்ட மக்கள் இண்டியா கூட்டணியை நிராகரித்துவிட்டனர். 2024ல் மீண்டும் மோடி பிரதமர் ஆவார் என்றார்.


தலைமை முடிவு




கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்பினர். மாற்றம், வளர்ச்சியை எதிர்பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்துள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தலைமையில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது. முதல்வர் யார் என்பதை தலைமை முடிவெடுக்கும் எனக் கூறினார்.

பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கடைசி நேரத்தில் 10,100 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கூட வெற்றி வாய்ப்பு மாறலாம். இறுதி முடிவு வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‛காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் தவிடிபொடியாகியது. பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைத்துள்ளது' என்றார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‛ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் டவுள் இன்ஜின் ஆட்சி' என்றார்.





தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்




தேர்தல் முடிவுகள் ‛ இண்டியா ' கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தாது. டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்திக்க உள்ளோம். கள நிலவரம் அவருக்கு தான் தெரியும். அதற்கு பிறகு தான் கருத்து கூற முடியும். தற்போதைய சூழல் பாஜ.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என நினைத்தோம். ஆனால், ராகுல் பேரணிக்கு பெரிய ஆதரவு கிடைத்ததை பார்த்த போது, மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்தேன் என்றார்.



தெலுங்கானா அமைச்சர் கேடி ராமராவ்




தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்த தெலுங்கானா மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இன்றைய தேர்தல் முடிவால் கவலைப்படவில்லை. ஆனால், ஏமாற்றம் அளிக்கிறது. இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் வருவோம். வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள் எனக்கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்



தெலுங்கானா, ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஆட்சியை வழங்க வாழ்த்துகிறேன் எனக்கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (6)

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    மதமாற்ற மாஃபியாக்கள், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள் விருப்பத்திற்கிணங்க என்று சொல்லமுடியாது. ஆனால் நம் பாரத தேசத்தில் வந்தேறிகள் படையெடுப்புக்கு பின் அதாவது இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் மதம் மாறிய இன்றைய இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பள்ளிவாசல்களில், பாதிரியார்களால் தெள்ளத் தெளிவாக உத்தரவிடப்பட்டு அதன்படி வாக்களிக்கப்படுகின்றன. தெலுங்கானாவில் எந்த தொகுதியில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு பள்ளிவாசல் தரப்பிலிருந்து ஒரு சார்ட் போட்டு கொடுத்திருப்பதாக செய்திகள் வந்தது. ஹிந்துத்துவா கொள்கைகளை கொண்ட பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க கூடாது என்றும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் பெயர் வேட்பாளரின் சின்னம் இரண்டையும் குறிப்பிட்டு வாக்களிக்க சொல்லி இருந்தார்கள். பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் சில இடங்களில் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். தெலங்கானா தேர்தல் முடிவு கூட அதையொட்டியே அமைந்துள்ளது அது போல இனி வரும் காலங்களில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெளிவாக சங்கராச்சாரியார், ஜீயர், சத்குரு போன்ற மடாதிபதிகள், ஆதீனங்கள், ஹிந்து சமய பெரியோர்கள் அறிவுறுத்த வேண்டும். பள்ளிவாசல் சொல்வதை இஸ்லாமியர்கள் கேட்பது போல, பாதிரியார்கள் சொல்வதை கிருஸ்தவர்கள் கேட்பது போல, ஹிந்துக்களுக்கு ஹிந்து சமய பெரியோர்கள் எடுத்து சொல்லவேண்டும்.

  • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

    One thing is certain BRS is demolished and it will never again rise its ugly head. The same fate awaits admk.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    ஆக கர்த்தரின் சீடர் விடியல் சார் துணை பிரதமர் ஆவது உறுதி ஆகி விட்டது என உபிஸ் குத்தூக்கலாம்

  • R SRINIVASAN - chennai ,இந்தியா

    மோடி ஒரு மக்கள் தலைவர் மற்றும் இரும்பு மனிதர் என்பதை நிரூபித்து விட்டார். அவருடைய ஆழ்ந்த அறிவு இந்த தேசத்தின் மீது உள்ள பற்று என்னை வியக்க வைக்கிறது .இந்தியாவை நிலைகுலைய வைக்கும் அமெரிக்க ,கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இனி இந்தியாவின் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    தேர்தல் தோல்விக்கு கான் கிரேஸ் கட்சியில் யார் மேல் பொறுப்பை போட்டு காப்பாற்றும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement