Load Image
Advertisement

தெலுங்கானாவில் காங்.,-ஐ கரை சேர்த்த ரேவந்த் ரெட்டி யார்?

 Telangana assembly result 2023: Revanth Reddy, the CM frontrunner, deals massive blow to KCR's BRS தெலுங்கானாவில் காங்.,-ஐ கரை சேர்த்த ரேவந்த் ரெட்டி யார்?
ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து முதல்வராக இருந்து வந்த சந்திரசேகர ராவை வீட்டிற்கு அனுப்பி விட்டு, காங்கிரசை ஆட்சி கட்டில் அமர்த்த விடா முயற்சி எடுத்தவர் தான் அம்மாநில காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி.

தெலுங்கானாவில் நம்மை அடிச்சுக்க ஆள் இல்லை என்று சந்திரசேகர ராவ் அதிக நம்பிக்கை வைத்து இருந்தார். அதுமட்டுமின்றி "ஹாட்ரிக்" அடித்து விடலாம் என சந்திரசேகர ராவ், அவரது மகன் கே.டி.ராமராவ் மற்றும் மகள் கவிதா தேர்தல் பிரசாரத்தில் ஜொலித்தனர்.

ஆனால் தெலுங்கானா மாநிலம் உருவாகிய போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க பெரிதும் பாடுபட்டவர் தான் ரேவந்த் ரெட்டி. முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து காமாரெட்டி தொகுதியில் போட்டியிட ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் திட்டமிட்டபடி சந்திரசேகர ராவை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்,


பின்னணி என்ன?




முன்பு ஏபிவிபி, தெலுங்குதேசம் கட்சிக்களில் இருந்தவர் ரேவந்த் ரெட்டி. கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். ராகுல், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார்.

மேலும் அவரின் செல்வாக்கு மற்றும் கடும் உழைப்பை பார்த்த காங்கிரஸ், கே.சி.ஆருக்கு இணையாக ரெட்டியையே முன்னிறுத்தி களம் இறக்கியது. அதன்படி, தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து முதல்வராக இருந்து வந்த சந்திரசேகர ராவை வீட்டிற்கு அனுப்பும் வாய்ப்பு காங்கிற்கு கிடைத்துள்ளது.

தெலுங்கானாவில் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (7)

  • S Ramkumar - Tiruvarur,இந்தியா

    பரவாயில்லை. ரேவந் ரெட்டிக்கு முதல்வராக தேர்ந்தெடுக்க பட்டார். காங்கிரசுக்கு புத்தி வரட்டும். இந்த அதிஷ்டம் டி கே சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. ஒன்னும் செய்யாத சித்த ராமைய்யா லவட்டிக்கிட்டு போயிட்டார்.

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    நாட்டிற்கு சேவை செய்யும் ABVP இல் இருந்தவர் ஊழல் செய்யும் கான் காங்கிரஸில? முரணாக இருக்கிறதே. .

  • swega - Dindigul,இந்தியா

    காமா ரெட்டி தொகுதியில் kcr மற்றும் ரேவந்த் ரெட்டி இருவரும் தோல்வி. அந்த தொகுதியில் பிஜேபி வெற்றி

  • raja - Cotonou,பெனின்

    தெலுங்கானா மக்கள் ஒரு கொள்ளை கூட்ட குடும்பத்தை விரட்டிவிட்டு ஒரு கொள்ளை கூட்டத்தையே ஆட்சியில் அமர்த்துகிரார்கள்...

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    தனக்குத்தானே குழி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்