Load Image
Advertisement

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை சரிய வைத்த குடும்ப அரசியல்

Congress takes power in Telangana: Why Chandrasekhara Raos setback?  தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை சரிய வைத்த குடும்ப அரசியல்
ADVERTISEMENT
தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றியும் பெற்றவர் சந்திரசேகர ராவ். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது. காங்கிரஸ் போட்ட கணக்கு வேறு, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி கொடுத்தால் அம்மாநில மக்கள் நமக்கு தான் ஓட்டளிப்பார்கள் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் நடந்தது வேறு.

தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சி கட்டிலில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.

இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. சந்திரசேகர ராவ் கட்சியினர் மீது நிறைய ஊழல் புகார்கள் இருக்கின்றன. மேலும் அவரது மகனும், மகளும் கட்சியில் தனி அதிகார மையமாக வலம் வருகின்றனர். அக்கட்சியும் குடும்ப கட்சியாக மாறி மக்களிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சந்திரசேகர ராவ் கட்சியை கவிழ்க்க போகிறது.


வாசகர் கருத்து (37)

 • Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா

  சும்மா இருங்கள் தெலுங்கான தேர்தல் வெற்றிக்கு ராவுல் வின்ஸி ஒன்றும் பொறுப்பில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் தனக்கு எட்டியவரையில் தெலுங்கானாவிலும் தான் அது தீஈஈஈவிரமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் கனிஷன் மண்டிக் கட்சிக்கு வரும் வாக்குகளைத் தடுக்கப் பார்த்தது அது ஆனால் எதிரணியில் பாஜக அவ்வளவு உற்சாகமாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது தேர்கல்களில் ராவுல் வின்ஸியின் பங்களிப்பு என்றால் அது தோல்விகளுக்கு மட்டுமே முழுவதும் பொருந்தும்

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  தனி மாநிலம் கேட்டு அதை பெற்று அன்று காங்கிரஸ் கட்சிக்கு இவர் ஆப்பு வைத்தார். இன்று அதே காங்கிரஸ் இவருக்கு ஆப்பு அடித்துவிட்டது. இதுதான் கர்மா என்று சொல்வார்கள்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சொந்தங்களின் ஆட்சிகளினால் வந்த பாடம் இது. இனி இது திராவிட விடியலுக்கு ஒரு பாடம் ஜாக்கிறதை சீக்கிரமே சரிவை காணவிருக்கும் அரசு தமிழக அரசு

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  ஒரு குடும்பத் தின் ஆட்சி முடிந்து அதை விட மோசமான குடும்பத்தின் கையில் ஆட்சி போயிருக்கு+++சந்தோஷப பட ஒன்றுமில்லை+++கேஜ்ரிவாலுடன் சேர்ந்து கவிதா மேற்கொண்ட சாராய ஊழலை மத்திய அரசு அம்பலப் படுத்தியதே,அதிருப்தி அலையாக மாறியது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்+++தமிழகத்தில், சினிமா மற்றும் சினிமா வசனத்தில் தம்மை பறி கொடுத்தார்கள்+++ கருணா குடும்பமும்,எம்ஜிஆர் மறைவுக்குப் பின் சசிகலா குடும்பமும் தான் மாறி மாறி ஆட்சி செய்யும் நிலைமை.++=குடும்ப அரசியலின் ஆணி வேரை அசைப்பது அவ்வளவு சுலபமில்லை என்கிறார்கள்..

 • c.k.sundar rao - MYSORE,இந்தியா

  Will atleast now TASMAC NADU people wake up from there slumber and throw out Dravidian parties in Bay of Bengal.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்