Load Image
Advertisement

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தம்

 Boat ride stop at Pichavaram Tourist Centre    பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தம்
ADVERTISEMENT


கிள்ளை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று முதல் இரண்டு நாட்கள் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதையடுத்து, நேற்று, காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதையடுத்து, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு படகு சவாரி நிறுத்த அறிவிக்கப்பட்டது. அதன்படி, படகுகள் சுற்றுலா மையத்தையொட்டி, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மோட்டார் படகுகளில் இருந்த இன்ஜின்கள் கழற்றப்பட்டது. காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா மையத்தில் உயர் கோபுர மின் விளக்குகளில் பல்புகள் கழற்றப்பட்டுள்ளது.

அதேப்போல், பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் இயக்கப்படும் படகுகளும், நேற்று முதல் இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement