Load Image
Advertisement

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவி

  Fingerprint Enrollment Tool in Ration Shops      ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவி
ADVERTISEMENT


சென்னை: ரேஷன் கடைகளில் புதிதாக கைரேகை பதிவு, 'பிரின்டர்' வசதியுடன், ஒருங்கிணைந்த விற்பனை முனைய கருவிகள் வைக்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில், ரேஷன் கடைகளை உள்ளடக்கிய பொது வினியோக திட்டம், 2017ல் கணினிமயம் ஆக்கப்பட்டது.

அத்திட்டத்தின் கீழ் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டன. அதில் கார்டு, 'ஸ்கேன்' செய்து, உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில், தமிழகம், 2020 அக்டோபரில் இணைந்தது.

அத்திட்டத்தின் கீழ் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக கடைகளுக்கு தனியே கைரேகை கருவிகள் வழங்கப்பட்டன.

தொலைதொடர்பு சிக்னலால் கைரேகை பதியும்போது, ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க, சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, கார்டுதாரர்களின் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்குவதை உள்ளடக்கிய, கணினிமய இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

இதற்காக, தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, அனைத்து ரேஷன் கடைகளில், விழிரேகை கருவி மற்றும் கைரேகை பதிவு கருவி, பிரின்டர் சாதனத்துடன், ஒருங்கிணைந்த விற்பனை முனைய கருவிகள் வைக்கப்பட வேண்டும்.

முதல் கட்டமாக தற்போது, அந்த கருவிகள், சென்னையில் உள்ள, 19 மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள தலா, ஐந்து ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டு உள்ளன.

மற்ற மாவட்டங்களில் தலா, 70 கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இனி ரேஷனில் பொருட்கள் வாங்கும்போது, அந்த கருவியில் கைரேகை பதிவு செய்யப்படும்; ரசீதும் தரப்படும். அவசியம் ஏற்பட்டால், விழிரேகை சரிபார்ப்பு கருவி பயன்படுத்தப்படும்' என்றார்.


வாசகர் கருத்து (2)

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    ரேஷன் கடைகளுக்கு எடைபோடாமல் வழங்கி பத்து சதவிகிதம் வரை மொத்த விநியோகத்தில் நடக்கும் கூட்டு கொள்ளையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த கூட்டு கொள்ளையில் ஈடுபடும் அதிகார வர்கம் சொல்வது ஏதேதோ செய்கின்றனர்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஒரு சில கடைகளைத்தவிர, மற்ற கடைகளில் இது கூடிய சீக்கிரம் பழுது ஆக வாய்ப்பிருக்கிறது. அப்புறம்? பழைய குருடி கதவை திறடி, கதைதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement