Load Image
Advertisement

சாலை நடுவே இருந்த காய்ந்த மரம் அகற்றம்

 Removal of dead trees in the middle of the road    சாலை நடுவே இருந்த காய்ந்த மரம் அகற்றம்
ADVERTISEMENT
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள காவல் நிலையம் எதிரில், சாலையின் மையப்பகுதியில் பட்டுப்போன மரம் ஒன்று இருந்தது.

இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால், காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால், பட்டுப்போன மரம் காற்றில் விழுந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது என, சில நாட்களுக்கு முன் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் ஆகியோர் உத்தரவுபடி, நகராட்சி பணியாளர்கள் நேற்று சாலையின் மையப்பகுதியில் இருந்த பட்டுப்போன மரத்தை அகற்றினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement