Load Image
Advertisement

சிறை காவலர்களிடம் கட்டிங் வாங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார்

 Anti-bribery police who bought cutting from prison guard    சிறை காவலர்களிடம் கட்டிங் வாங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார்
ADVERTISEMENT

''சிறைத் துறை பஞ்சாயத்தை கேளுங்கோ...'' என, மேட்டரை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தமிழக சிறைகளில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமா புழங்கறது... இது சம்பந்தமா, லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமா விசாரிச்சுண்டு இருக்கா ஓய்...

''சிறை காவலர்களின் மெபைல் போன் தொடர்புகள், வங்கி கணக்கு வரவு - செலவை அலசி ஆராயறா... இதுக்கு, சிறை காவலர்கள் மத்தியில எதிர்ப்பு கிளம்பி இருக்கு ஓய்...

''அவா தரப்புல, 'லஞ்ச ஒழிப்பு துறை மட்டும் என்ன ஒழுங்கா... சிறை காவலர் ஒருவரை, சிக்கலில் மாட்டி விடாம இருக்க, அவர்கிட்ட 2 லட்சம் ரூபாய், 'கட்டிங்' வாங்கி இருக்கா...

''இன்னொருத்தர், தன் மகனுக்கு 3 லட்சம் ரூபாய் பைக்கை லஞ்சமா வாங்கி இருக்கார்... லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத சிறை காவலர்களை மட்டும் பழிவாங்கறா'ன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எம்.எல்.ஏ.,வை மறுபடியும் அவமானப்படுத்திட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டம், எறையூர் கிராமம் இருக்குல்லா... இங்க, தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்ட ஆலையை, சென்னையில இருந்தபடி முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்'ல திறந்து வச்சாரு... விழா அழைப்பிதழ்ல, உள்ளூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பிரபாகரனின் பெயரை போடல வே...

''துவக்க விழாவுலயும் அவரை பேச அனுமதிக்கல... அட, மேடையில அவருக்கு நாற்காலி கூட போடலன்னா பாருங்க...

''விழா துவங்கியதும், கலெக்டர் கற்பகம் சொன்ன பிறகு தான், மேடைக்கு கீழ எம்.எல்.ஏ.,வுக்கு நாற்காலி போட்டாவ... 'கட்சியில ராஜா மாதிரி வலம் வர்ற பெரிய மனுஷன் தான் இதுக்கு காரணம்'னு, கட்சிக்காரங்க புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கோவில் பணம் எப்படியெல்லாம் வீணாகுது பாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த கோவில்ல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''எல்லாம், நம்ம திருவள்ளூர் மாவட்டத்தின் பிரபலமான முருகன் கோவில் சங்கதிதாங்க... கோவில்ல இரவு காவலரா வேலை பார்த்தவரு, மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்றுட்டாருங்க...

''ஆனா, கோவில் ஊழியருங்க, இந்த விஷயத்தை அப்போதைய பெண் அதிகாரி கவனத்துக்கு கொண்டு போகலியாம்... அந்த காவலரும், போன மாசம் 25ம் தேதி வரைக்கும் வேலைக்கு வந்திருக்காருங்க... அக்டோபர் மாசம் வரைக்கும் சம்பளமும் கொடுத்திருக்காங்க...

''கோவிலின் தற்போதைய பெண் அதிகாரிக்கு இந்த தகவல் தெரிஞ்சதும் அதிர்ச்சி ஆகிட்டாங்க... இரவு காவலரை பணியில் இருந்து விடுவிச்சுட்டாங்க... கூடுதலா வாங்கிய அஞ்சு மாச சம்பளத்தை கோவில் கணக்குல சேர்க்க சொல்லி கேட்டாங்க...

''அதுக்கு அந்த காவலர், 'எனக்கு பணி ஓய்வு தேதி எல்லாம் தெரியாது... நிர்வாகம் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்... சம்பளத்தை திருப்பி தர முடியாது'ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாருங்க...

''இப்ப, இந்த விவகாரத்தை, 'டீல்' செஞ்ச கோவில் ஊழியர்கள் மூணு பேருக்கு, 'மெமோ' கொடுத்துட்டாங்க... முன்னாள், இந்நாள் பெண் அதிகாரிகள், நடந்த தவறை மறைக்க தீவிரமா முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''விஜயா மேடம்... ரமணிகிட்ட பேசிட்டேன்... அவா என்ன சொல்றான்னா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (2)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அறமற்ற இந்துஅல்லாதவர்களுக்குமான நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யலாம். சில ஆயிரங்களுக்கு ஜனநாயகத்தை விற்கும் கேவல ஜந்துக்கள் இருக்கும் வரை இந்துக்கள் திராவிடத்துக்கு அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    சேச்சே இது லஞ்சம் கிடையாது. பண பரிமாற்றம். பங்காளிகள் இடையே நடக்கும் பண்ட மாற்று வியாபாரம். குற்றமே அல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement