Load Image
Advertisement

வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்

முழு விபரம்:

 Rains will last for 3 days in Tamil Nadu: Interview with South Region President Balachandran   வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்
ADVERTISEMENT
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. ‛மிக்ஜாம் ' புயல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறியதாவது: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 340 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை டிசம்பர் 3ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகிறது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5ம் தேதி புயல் கரையைக் கடக்கும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் டிச.,4ம் தேதி தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tamil News
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் நாளை(டிச.,03) ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேப்போல் வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


வேலூர், திருவண்ணாமலை, களக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுமான பணிகளுக்கு தடை



சென்னையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுகாதாரத் துறை உத்தரவு



தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவசர கால மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தயார் நிலையில் மீட்பு படை





புயலினால் ஏற்படும் பாதிப்பினை எதிர்க்கொள்ள பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

சிறப்பு மருத்துவ அதிகாரிகள் நியமனம்



புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சிறப்பு மருத்துவஅதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட சிறப்பு: அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தின் அவசர கால தேவைகளை கண்காணிப்பார்கள்

சென்னை டி.எம்எஸ்சை தலைமையிடமாக கொண்டு 24 மணி நேரமும் செயல்பட கூடிய வகையில் கட்டுப்பாட்படுபு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 108 ஆம்புலன்ஸ்கள் அவசரகால சேவைகளுக்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

புயல் கரையை கடந்த பின்னரும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை இதே அதிகாரிகள் கண்காணிப்பர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.



வாசகர் கருத்து (8)

  • Bharathi -

    Upies...ondriaya arasin pazhi vangum seyal

  • sukumar -

    மிக் ஜாம் ? It is MICHAUNG

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    மேலே ஒரு நண்பர் சென்னை தப்பியது என்று சந்தோஷப்படுகிறார். சென்னை புயலிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் கடந்த நாட்களில் பெய்த மழையில் சென்னை 'தத்தளிக்கிறது'. ஒருவேளை புயல் சென்னை அருகே கரையை கடந்தால் சென்னையின் நிலை என்னவாகி இருக்கும், யோசியுங்கள் நண்பரே...??

  • ராஜா -

    தென்காசி பகுதியில் கனமழை

  • Thetamilan - CHennai,இந்தியா

    கடக்கும், கடக்கலாம், வரும் வரலாம் கிடைக்காமலும் போகலாம், வராமலும் போகலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement