Load Image
Advertisement

இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல்: சபாநாயகர் "பகீர்" குற்றச்சாட்டு

 Intimidation through middlemen: Speaker "Bagheer" allegation  இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல்: சபாநாயகர் "பகீர்" குற்றச்சாட்டு
ADVERTISEMENT

திருநெல்வேலி: புலனாய்வு அமைப்புகள் மூலம் மத்திய அரசு தன்னை மிரட்டுவதாக தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலையை தெரிந்து கொண்டு பாஜ., ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் குறி வைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுகிறார்கள். இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி குறிப்பிட்ட பணத்தை வாங்குகிறார்கள்.

இடைத்தரகர்கள் மூலம் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் என்னை மிரட்டியது. என்னிடமும் கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசி மிரட்டினார்கள். மத்திய அரசு உங்களிடம் பிரச்னை செய்ய சொல்லி இருக்கிறது என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு போகச் சொன்னார்கள். செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். இப்படி எல்லாம் எனக்கு கடந்த மூன்று மாத காலமாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது.

என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளது. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்படுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மதசார்புடைய நாடு இந்தியா என கவர்னர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (62)

 • Bharathi -

  supreme Court must take his statement and order for a probe

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இப்படியெல்லாம் உருட்டலையின்னா அப்புறம் எப்படி திமுக காரர் என்று நிரூபிப்பது? இதெல்லாம் ஒரு பிழைப்பு.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  , பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். எப்படி இப்படி வாய் கூசாமல் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறீர்களோ? இது உங்களுக்கே அடுக்குமா?

 • Shankar - Hawally,குவைத்

  இவருக்கு பொய் சொல்ல அனுபவம் பத்தாது. திமுக கட்சிக்காரங்க யாராவது அவருக்கு எப்படி நம்புற மாதிரி பொய்பேசணும்னு சொல்லி கொடுங்கப்பா.

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  சபாநாயகர் அப்பாவுக்கு கேள்விகள்.. 1) அப்படி மிரட்டி இருந்தால் நீங்கள் ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை ? 2) எதைச் சொல்லி மிரட்டினார்கள் ? உன்னுடைய மகனின் முறைகேடான நடவடிக்கைகளைப் பற்றி நிறைய பேச்சு உலா வருகிறது. அதை சொல்லி மிரட்டினார்களா ? 3) மிரட்டும் அளவிற்கு நீங்கள் என்ன தவறுகளை செய்தீர்கள் ? 4) உங்களை மீரட்டியவர் போன் நம்பரை பொதுவெளியில் கொடுக்கலாமே... இந்த கதை எல்லாம் வேற எங்கேயாவது விடவும். சிபிஐ, அப்பாவுவின் இந்த பேச்சை suo motto வாக எடுத்துக்கொண்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்