Load Image
Advertisement

போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: தலைமை நீதிபதி சந்திரசூட்

 "With Advent Of Troll Armies...": Chief Justice On Free Speech On Internet போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: தலைமை நீதிபதி சந்திரசூட்
ADVERTISEMENT

புதுடில்லி: வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்திரசூட் கூறியிருப்பதாவது: போலியான செய்திகளால் வன்முறை ஏற்படுவதை செய்தியாக நாம் தினந்தோறும் படித்து வருகிறோம். இணையதளங்கள் வாயிலாக பரவும் போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தல்கள் மற்றும் சமூகங்களை போலி செய்திகள் சீர்குலைக்கின்றன. நாடு சோகமான கோவிட் தொற்றுநோயை எதிர் கொண்டபோது, ​​இணையதளம் போலி செய்திகள் மற்றும் வதந்திகளால் நிறைந்திருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது.

வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது. இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவி வரும் காலகட்டத்தில் பேச்சு சுதந்திரத்தை நிர்வகிக்க புதிய கோட்பாடுகள் தேவைப்படுகிறது. அரசிற்கு எதிராக சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை விரிவுபடுத்த பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை நம்பியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (17)

  • GMM - KA,இந்தியா

    போலி × உண்மை, இலவசம் × சமூக நலம், மதசார்பு × மதசார்பற்ற சமூகம், ஏழை × பணக்காரன், வாக்காளர் ஆயுள் தகுதி, யுக கணக்கில் இட ஒதுக்கீடு, ஆளுக்கு ஒரு சாதி அளவுகோல் போன்ற முக்கிய மாறுபட்ட அரசியல், நீதிமன்ற விளக்கம் மற்றும் உழைக்காமல் வாழ, குற்றத்தில் இருந்து விடுபட வாய்ப்பு /பலன் இருக்கும் வரை போலி உலவும்.

  • Gopalan - ,

    ஊழல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்குவதற்கு நீதித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்குப் பதிலாக ஒருபோதும் முடிவடையாத செயல்முறையாக வழக்குகளை நீடித்தால் இது தவறான செய்திகளை கொண்டு செல்லும். விரைந்து நீதி வழங்கினால் மக்கள் நீதித்துறையை மதிப்பார்கள்.

  • ganesha - tamilnadu,இந்தியா

    நல்ல கண்டுபிடிப்பு 👏

  • அப்புசாமி -

    அரசு அவிழ்த்துவிடும் அதிகார பூர்வ பொய்களை மட்டுமே நம்புங்க. மத்தவங்க உண்மை சொன்னாலும் நம்பாதீங்க. புரியுது எசமான்.

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    இதில் நீட் தேர்வு, மக்கள் மகிழ்ச்கியாக் உள்ளனர் , சென்னையில் வெள்ளமே தேங்க வில்லை , மதுக்கடைகளால் மக்கள் மகிழ்சீ, திராவிட மடெல் ஆட்சியில் விடிவு அடந்தனர் மக்கள் அற நிலயத்துறை... வேங்கை வயல் போன்ற அனைத்து விஷயங்களிலும் உண்மை மட்டும் வெளியில் வருமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement